தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பதியப்பட்டுள்ள வழக்குகளில் திமுக முதலிடத்தில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிகளை மீறியதாக 4,690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தற்போதுவரை தேர்தல் விதிகளை மீறியதாக தமிழ்நாட்டில் பதியப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,690. அதில் திமுக மீது 1,695 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

ஆளும் கட்சியான அதிமுக மீது 1,453 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படையால் தமிழகத்தில் இதுவரை ரூ.213.18 கோடி 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும், மே-23ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும். முன்னதாக மே 19ம் தேதி, 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.