* மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான போரில் அவருக்கு நாங்கள் ஆதரவாய் நிற்கிறோம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். (சூப்பருண்ணே! கேவலம் கூட்டணிக்காக, அந்த மோசடி பிரச்னையில் தர்மத்துக்கு எதிரா போறீங்க. அப்படியே 2ஜி மேல்முறையீடு வழக்கையும் சொல்லி, அதுலேயும் ஆ.ராசாவுக்கு ஆதரவாக நாங்க நிக்குறோமுன்னு சொல்லிடுங்க. அரசியல் அம்சமா இருக்கும்.)

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: மு.க. ஸ்டாலின். (தல செம்ம தல! எதிரிக்கட்சி தலைவியின் மேலேயே இவ்வளவு பாசத்த கொட்டுற நீங்க,  உங்க கட்சியில் கொல்லப்பட்ட தா.கிருட்டிணன், பொட்டு சுரேஷ், சிவகங்கை மாஜி சேர்மன் முருகன், தினகரன் எரிப்பு வழக்கு இதுல எல்லாம் நீதியை நிலை நாட்டாமலா போயிடுவீங்க?)

* தமிழகத்தின் அனைத்து பிராந்திய கட்சிகளும் எங்களுடன் ஒரு கட்டத்தில் கூட்டணி அமைத்த கட்சிகள்தான்: முரளிதர் ராவ். (ராவ் காரு இப்ப என்ன சொல்ல வர்றீங்க? பழைய கதையை பேசிட்டிருந்தா புது அரிசி வேகாது. முடிஞ்சதை நினைச்சு சீன் பண்ணிட்டிருந்தா ‘ஒரு காலத்துல நாங்களும் இந்த நாட்டை ஆண்டவங்கதான்’ அப்படின்னு டயலாக் பேசக்கூடிய நிலைமை வந்துடப்போவுது.)

* திறமை இருந்தால் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்: ஓ.பன்னீர்செல்வம். (நீங்களே சொல்லிட்டீங்கப்பு, பின்னே என்ன டி.டி.வி.பாட்டுக்கு வந்து தேனி, மதர, சிவகங்கன்னு வெளாடிட்டு போவட்டுமே அரசியல்ல.  விஷக்கிருமி! கொள்ளைக்கூட்டம்!ன்னு அவரை ஒடுக்கி ஓரங்கட்டப் பார்க்குறீக?)

* அன்னிய முதலீடு 21 சதவீதமாக குறைந்துள்ளதுதான் அ.தி.மு.க. அரசின் சாதனை. தெருவில் திருந்தவரையெல்லாம் கோட் சூட் மாட்டிவிட்டு உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் உட்கார வைத்துள்ளார்கள்: மு.க. ஸ்டாலின். (தலீவரே! அத மறந்துட்டீங்க....’ஆக இன்றைக்கு ஏதோ வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இதை நான் பேசவில்லை. நான் பொய் பேசமாட்டேன், நான் கலைஞரின் மகன்.’ இதை சொல்ல மறந்துட்டீங்க. அட சொல்லுங்க...இது சரியான டைம், அடிச்சு விடுங்க.)