Asianet News TamilAsianet News Tamil

ஐந்து கேள்விகளால் அரசை திணறடிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..!! வெளிப்படத் தன்மை இல்லை என குமுறல்..!!

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றால், ஏன் பாதிப்பு அதிகரித்துவருகிறது.? 

dmk leader mk stalin asking 5 question tamilnadu government about corona
Author
Chennai, First Published Jun 15, 2020, 2:27 PM IST

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றால், ஏன் பதிப்பு அதிகரித்துவருகிறது என கேள்வி எழுப்பியுள்ள  திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கொரோனா விவகாரத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார், மேலும்  தமிழகத்தில் மார்ச் 7-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியது, ஆனால் அதை பொருட்படுத்தாத தமிழக அரசு மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருந்து காலதாமதம் செய்ததின் விளைவாக தமிழகத்தில்  வைரஸ் தொற்று தீவிரமாக பரவியுள்ளது என்றார். 

dmk leader mk stalin asking 5 question tamilnadu government about corona

மத்திய அரசு ஊரங்கு அறிவித்த பின்னரே தமிழக அரசு விழித்துக் கொண்டது என்றும் ஊரடங்கு அறிவிப்பதில் தமிழக அரசு தொடர்ந்து மெத்தனமாக நடந்து கொண்டதால் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார். அதிலும் குறிப்பாக சென்னையில் நோய்தொற்று கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்கிறது, ஏப்ரல் மாதத்தில் 1%  இருந்த நோய்த்தொற்று தற்போது 10% அதிகரித்துள்ளது. டெல்லியில் நாளொன்றுக்கு 990 பேர் தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், சென்னையில் சராசரி நோய்த்தொற்று நாள் ஒன்றுக்கு 1597 ஆக பதிவாகி வருகிறது என அவர் கவலை தெரிவித்தார். மேலும்  அரசியல்  மனமாச்சரியங்களை கடந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி நோய்தோற்றை கட்டுக்குள்கொண்டுவர முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கைக்கு அரசுசெவிசாய்க்கவில்லை என்றார். தங்களால் பிரதமருடன் பேச முடிந்த அளவிற்கு கூட முதலமைச்சரை சந்தித்து பேச முடியவில்லை, ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களை தவறாக வழி நடத்தியுள்ளார், ஆனால் அதற்கு மாறாக சென்னையில்  95% அளவுக்கு நோய்த்தொற்றுபரவியுள்ளது. 

dmk leader mk stalin asking 5 question tamilnadu government about corona

பத்து நபர்களை சோதித்தால் அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்த முன்னெச்சரிக்கையுமின்றி நான்கு நாட்கள் முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்ததன் விளைவாக மக்கள் காய்கறி கடைகளிலும், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் அதிகமாக கூடியதன் காரணமாக சென்னையில் நோய்த்தொற்று பன்மடங்கு அதிகரித்துள்ளது. இப்படி தவறான நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் அதிகரிக்க தமிழக முதலமைச்சர் காரணமாக இருந்துள்ளார். நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்ததால் மேலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார். மொத்தத்தில் தமிழக அரசு மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர்,  தமிழக அரசுக்கு ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ளார், அதாவது,  தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றால், ஏன் பாதிப்பு அதிகரித்துவருகிறது.? கொரோனா ஊரடங்கின்போது நோய்கட்டுப்படுத்த குழுவுக்குமேல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குழுக்களின் அறிக்கைகள் எங்கே.? எதிர்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமாக ஆலோசிக்க அரசு ஏன் தயங்குகிறது .? சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அரசு எப்போது வெளியிடும்.?  பொருளாதார மீட்பு, வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய அரசு எப்போது கவனம் செலுத்தும் என அவர் சரமாரிகேள்வி எழுப்பியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios