DMK leader Karunanidhi at the Gopalapuram house in Madras met with the founder ramadoss.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி சில ஆண்டு காலமாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார்.
இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி திமுக தலைவர் ' கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றதில் மகிழ்ச்சி என்றும் விரைவில் முழு உடல்நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.

இதைதொடர்ந்து ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் அவ்வபோது குரல் எழுப்பி வருகிறார் ராமதாஸ். அதாவது தமிழக அரசுக்கு எதிராக ஸ்டாலின் எழுப்பும் அதே குற்றச்சாட்டுகளையும் கோரிக்கையுமே ராமதாஸும் வைத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று திடீரென கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன்மூலம் திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் திட்டமிடுகிறாரா என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
