Asianet News TamilAsianet News Tamil

DMK : “வருங்கால ஜனாதிபதி முருகேசன்..” டெம்பிளேட்டில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்..வைரல் திமுக போஸ்டர்

சிறுபான்மை மக்களின் ஒரே பாரத பிரதமர் எங்கள் தளபதி மட்டுமே என்று போஸ்டர் அடித்து, திமுகவினரையே மிரள வைத்து இருக்கிறார் ஜெ.எம்.பஷீர்.

Dmk jm basheer poster viral in social media trolls
Author
Tamilnadu, First Published Dec 14, 2021, 9:40 AM IST

யார் இந்த ஜெ.எம்.பஷீர் ? அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளராக பதவி வகித்தார் ஜெ.எம்.பஷீர். ‘சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்த போது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை வற்புறுத்தினார்கள். அவரை வற்புறுத்தியது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமி எனும் தனிமனிதன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக முகம்மது ஜான் வாக்களித்தார். ஆனால்,  அவர் மறைவுக்கு பிறகு ஆறுதல் கூட எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. இன்றைக்கு வந்த திமுக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Dmk jm basheer poster viral in social media trolls

இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.  இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான்’ என்று அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். மேலும், அவரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் கூறினார் ஜெ.எம்.பஷீர். அன்று பிற்பகலிலேயே கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜெ.எம்.பஷீரை சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாகனத்திற்குச் செல்லும்போது, சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்து அவரை சந்தித்து பேசினார். 

Dmk jm basheer poster viral in social media trolls

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு திமுகவில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். திமுகவில் அவருக்கு  சிறுபான்மை உரிமை பிரிவில் பொறுப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெ.எம்.பஷீர் ஒட்டியுள்ள ஒரு போஸ்டர் திமுகவினரையே மிரள வைத்து இருக்கிறது. 

Dmk jm basheer poster viral in social media trolls

அதில், ‘தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ என்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து, சட்டசபையில் தீர்மானம் போட்டு இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒரே முதல்வர் என்றும், இனி இந்திய சிறுபான்மை மக்களின் ஒரே பாரத பிரதமர் எங்கள் தளபதி மட்டுமே என்றும் எழுதி திமுக உடன்பிறப்புகளுக்கே கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கிறார் பஷீர். இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ‘வச்சு’ செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ‘வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க’ என்று லிவிங்ஸ்டன் பட டெம்பிளேட், யார்ரா நீங்கெல்லாம் என்று திமுகவினர் கேட்பது போலவும் மீம்களை பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios