பெண்களையும், தாய்மையையும் மதிக்க தெரியாத ஸ்டாலினை புறக்கணிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

பெண்களையும், தாய்மையையும் மதிக்க தெரியாத ஸ்டாலினை புறக்கணிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டப்பேரவை தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் ராஜாவை ஆதரித்து சின்னசேலத்தில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- சின்னத்தை பார்த்து வாக்களிக்க வேண்டாம். வேட்பாளரை பார்த்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதல்வராக உள்ளார். பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும். சங்கராபுரம் பாமக வேட்பாளர் ராஜா, எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவம் படித்த, தொலைநோக்கு சிந்தனை உடைய இளைஞர். கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி முதன்முதலாக குரல் கொடுத்தவர் ராஜா.

திமுக வேட்பாளர் உதயசூரியன், பல முறை வெற்றி பெற்றும், தொகுதிக்காக எந்த திட்டத்தையும் செய்யவில்லை. இதனால் இம்முறை மக்கள் பாமகவை ஆதரிக்கின்றனர். திமுக வேட்பாளர் உதயசூரியனுக்கு கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் தான் தொழில். இவர் மட்டுமல்ல, திமுக என்றாலே ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு தான். திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி.

விவசாயம், சமூகநீதி, சமத்துவம், மக்களின் கஷ்டம், கணக்கு, வரலாறு என எதை பற்றியுமே தெரியாதவர் ஸ்டாலின். முதல்வர் பழனிசாமி இயல்பானவர், யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், பேசலாம். ஆனால், ஸ்டாலின் பக்கத்தில் திமுக கட்சியினரே நெருங்க முடியாது. திமுக பெண்களையும், தாய்மையையும் மதிக்க தெரியாத கட்சி. பெண்களை தெய்வங்களாக வணங்கும் பூமி இது . குடும்பத் தலைவிகளின் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.