Asianet News TamilAsianet News Tamil

பறக்கும் படையை மிரட்டிய தி.மு.க. பிரமுகர்... கடுப்பில் தேர்தல் அலுவலர்கள்..!

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்முறையும் அடிதடியும் நிகழும், அதிகாரிகளை மிரட்டுவார்கள் என்பதற்கு உதாரணமாக இப்போதே ஒருசில சம்பவங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.
 

DMK intimidates flying squad vip ... Election officials under pressure
Author
Tamil Nadu, First Published Mar 20, 2021, 11:20 AM IST

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்முறையும் அடிதடியும் நிகழும், அதிகாரிகளை மிரட்டுவார்கள் என்பதற்கு உதாரணமாக இப்போதே ஒருசில சம்பவங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.

விழுப்புரம் அருகே நடைபெற்ற சம்பவம் இது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வாகனம் ஒன்று வெகு வேகமாக சென்றுகொண்டிருந்தது. விழுப்புரத்திற்கு கொஞ்சம் தூரத்திற்கு முன்பாக பறக்கும் படையினர் அதை வழிமறித்தனர். மேலோட்டமாக சோதனையிட்டதில் எதுவும் தென்படவில்லை. வண்டியை போகச் சொன்ன நேரத்தில் அதிகாரி ஒருவர் நிறுத்தச் சொல்லியிருக்கிறார். வாகனத்தின் சீட் பகுதி துறுத்திக் கொண்டிருக்க, அதனை கிழிக்கச் சொல்லியிருக்கிறார். வாகனத்தில் இருந்தவர்கள் மறுக்க, போலீஸ் களமிறங்கியது.DMK intimidates flying squad vip ... Election officials under pressure

சீட்டை கிழித்துப் பார்த்தால் அத்தனையும் கரன்சி நோட்டுக்கள். மளமளவென அவற்றை போலீஸார் கைப்பற்ற, சிறிது நேரத்தில் விழுப்புரம் திமுக பிரமுகரிடமிருந்து போன்.’’நம்ம பணம்தான். விட்டிடு’’என எடுத்த எடுப்பிலேயே ஏக வசனத்தில் பேச, அதிகாரி மறுத்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அடுத்த போன்.

DMK intimidates flying squad vip ... Election officials under pressure

இப்போது பேசியவர் வருவாய்துறை உயரதிகாரி. ’’அடுத்து ஆட்சிக்கு வரப்போறவங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்து கொள்ளுங்கள். பணத்தை ரிட்டர்ன் பண்ணிடுங்க’’என உத்தரவிடும் குரலில் கூற வேறு வழியில்லாத அதிகாரி அப்படியே செய்திருக்கிறார். பறக்கும் படையில் இருந்தவர்களோ, ‘’ இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. அதற்குள் இத்தனை அராஜகமா?’’என கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios