Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் நோட்டாவைத் தாண்டுவதைக்கூட மறந்துடுங்க... ஒரே வார்த்தையில் பாஜகவை பங்கம் செய்த மு.க.ஸ்டாலின்!

இப்படி குறைக்கப்பட்ட பாடங்களில் திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள் போன்ற பாடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும். மத்திய அரசுக்கு ட்விட்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 

DMK head M.K.Stalin slam bjp government
Author
Chennai, First Published Jul 16, 2020, 7:48 AM IST

சிலப்பதிகாரம், திருக்குறள், பெரியார் சிந்தனைகள் உள்ளிட்ட பாடங்களைச் சேர்க்காவிட்டால்,  தமிழ் மண்ணில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என்று மோடி அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 DMK head M.K.Stalin slam bjp government
கொரோனா தொற்று காரணமாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவருகின்றன. மேலும் இந்தச் சுமையைக் குறைக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி 30 சதவீத பாடங்களைக் குறைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. இப்படி குறைக்கப்பட்ட பாடங்களில் திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள் போன்ற பாடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும். மத்திய அரசுக்கு ட்விட்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். DMK head M.K.Stalin slam bjp government
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ‘ராணுவத்தில் தமிழர்கள் பங்கு’ என்ற பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லைப் போராட்டம் ஆகிய பாடங்களை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்தால், தமிழ் மண்ணில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios