Asianet News TamilAsianet News Tamil

துரைமுருகன் அதிரடி..! முதல்ல தொடங்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்.. இதுல மும்முனை போட்டி வேற ..!

தமிழகத்தில் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்க பிடலாம் என்ற பரவலான கருத்து நிலவி வந்த நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தன்னுடைய தெளிவான கருத்தை முன் வைத்து உள்ளார் ரஜினி 

dmk duraimurugan commented about rajinis political entry and conveyed stalin is the right person to become as cm in tamilnadu
Author
Chennai, First Published Nov 8, 2019, 5:49 PM IST

துரைமுருகன் அதிரடி..! முதல்ல தொடங்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்.. இதுல மும்முனை போட்டி வேற ..! 

நடிகர் ரஜினிகாந்தின் பாஜக உடனான அரசியல் தொடர்பு மற்றும் தமிழக அரசியலில்  வெற்றிடம் உள்ளது என்ற கருத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக திமுக பொருளாளர்  துரைமுருகன் காரசாரமாக பேசி  உள்ளார்  

தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்கபடலாம் என்ற பரவலான கருத்து நிலவி வந்த நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தன்னுடைய தெளிவான கருத்தை முன் வைத்து உள்ளார் ரஜினி 

dmk duraimurugan commented about rajinis political entry and conveyed stalin is the right person to become as cm in tamilnadu

அப்போது, 

பாரதிய ஜனதா எனக்கு எந்த அழைப்போம் விடுக்கவில்லை... உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை... திருவள்ளுவர் நாத்திகர் அல்ல; ஆத்திகர். கடவுள் நம்பிக்கையோடு இருந்தவர். திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்; பாஜக தனது டுவிட்டரில் காவி உடையுடன் வள்ளுவர் படத்தை வெளியிட்டது அவர்களது விருப்பம்; பேச வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு வள்ளுவர் விவகாரம் இவ்வளவு பெரிய சர்ச்சையாகி உள்ளது ஆபத்தான ஒரு விஷயம்....

dmk duraimurugan commented about rajinis political entry and conveyed stalin is the right person to become as cm in tamilnadu

மத்திய அரசு விருது அளிப்பதற்கு நன்றி; திருவள்ளுவருக்கு காவி பூசியது போல் என் மீது பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவருக்கும் எனக்கும் பாஜக சாயம் பூசும் முயற்சியில் இருவருமே மாட்டிக்கொள்ள மாட்டோம்

தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது; அயோத்தி தீர்ப்பு பொறுத்த வரையில் எந்த தீர்ப்பு வந்தாலும், அமைதி காக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை; நான் எப்போதும் வெளிப்படையாக தான் பேசுவேன்; எம்ஜிஆர் முதல்வராகும் வரையியில் நடித்துக்கொண்டு தான் இருந்தார்...நானும் அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என தெரிவித்து இருந்தார். 

இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவிக்கும் போது," ரஜினிக்கு தமிழக அரசியலின் தட்பவெப்ப நிலை தெரியவில்லை..அவர் அரசியலுக்கு வருவேன் என தான் சொல்லி  இருக்கிறார். முதலில் வரட்டும் அப்புறம் பார்க்கலாம். அதுக்குள்ள மும்முனை போட்டி பற்றி எல்லாம் பேசவேண்டிய அவசியமே இல்லை...என்றும் தெரிவித்து உள்ளார்.

dmk duraimurugan commented about rajinis political entry and conveyed stalin is the right person to become as cm in tamilnadu

தமிழகத்தில் நல்ல ஆளுமைக்கான வெற்றிடம் நிலவுகிறது என ரஜினி தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, "தமிழக்தின் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி விட்டார் என ஒரே போடாய் உறுதியாக  தெரிவித்தார் துரைமுருகன்

இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் நல்ல ஆளுமை  இல்லை என தெரிவிக்கும் ரஜினிகாந்த், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்து உள்ளார். அப்படி என்றால் சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஸ்ட்ரெயிட்டா முதல்வர் ஆகணும் ... என்பதில் மட்டுமே ரஜினி  குறியாக இருப்பதை உணர்த்துகிறது இவரின் இன்றைய பேட்டி. அதனால்  தான், முதலில் கட்சியை தொடங்கட்டும் பிறகு பார்த்துக்கலாம் என துரைமுருகனும் அசால்டாக பதில் சொல்கிறார் என்கிறது அரசியல் தரப்பு வாதம் 

Follow Us:
Download App:
  • android
  • ios