டீமுக்கு 6 பேர் ... ஒட்டுக்கு 1000... அதிகாலை 5 மணிக்கே பட்டுவாடா ஸ்டார்ட் பண்ண திமுக!!

இன்று அதிகாலையிலேயே தொகுதி முழுக்க திமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது. பண பட்டுவாடா செய்யும் பொறுப்பை மாவட்ட செயலாளரான பொன்முடியிடம் கொடுக்காமல், எ.வ.வேலுவிடம் கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

DMK Distribute money for vote at vikiravandi

விக்ரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி  தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அதிகாலையிலேயே தொகுதி முழுக்க திமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது. பண பட்டுவாடா செய்யும் பொறுப்பை மாவட்ட செயலாளரான பொன்முடியிடம் கொடுக்காமல், எ.வ.வேலுவிடம் கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

ஒட்டர் லிஸ்டை வைத்துக்கொண்டு அதிகாலையிலேயே ஒவ்வொரு ஏரியாவிற்கும்  லோக்கல் ஒன்றிய திமுகவினர் இருவர், பணப்பட்டுவாடா செய்யும் குழுவில் உள்ள இரண்டு பேரும், மத்திய மாவட்ட திமுக சார்பில் இருவர் என மொத்தம் 6 நபர்களைபணப்பட்டுவாடா குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நேற்று இரவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்களில் உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ரெடியாக வைத்துக் கொண்டது. இன்று அதிகாலை 5 மணி முதல் திமுகவுக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள், திமுக சார்பாக பொதுமக்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு பணப் பட்டுவாடா தொடங்கி விட்டது. இன்று இரவுக்குள் பணப் பட்டுவாடாவை முடித்துவிடும் முடிவில் இருக்கிறார்களாம்.

அதிமுக எவ்வளவு கொடுக்கப் போகிறது என்பதோ, எப்போது கொடுக்கப் போகிறது என்பதோ தெரியாத நிலையில் திமுக இப்படி முந்தி கொண்டுள்ளது திமுக.

“பொதுவாகவே கிராமங்களில் முதலில் யார் பணம் கொடுத்தார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இரண்டாவதாக கொடுத்தவர்கள் அதிகமாக கொடுத்திருந்தால் கூட முதலில் தங்களை நாடி வந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் யோசிக்கிறார்கள். இன்னொரு முக்கியமான மேட்டர் என்னன்னா? ஒரு வாரம் அவகாசம் இருக்கும் போதே பணப்பட்டுவாடா செய்தால், பணம் கொடுக்க விடுபட்டிருந்தால் அவர்களைக் கண்டறிந்து இன்னும் சில நாட்களில் கொடுத்து விடலாம் என்ற பிளானும் முதலில் களமிறங்கிள்ளதாம்.

அதேபோல, கடைசி நேரத்தில் பணம் கொடுப்பதன் மூலம் விடுபட்ட வாக்காளர்களுக்கும் தரமுடியவில்லை. நிர்வாகிகளிடமும் கணக்கும் கேட்க முடியாது. வெளியூர் நிர்வாகிகள் கொடுத்தது தான் கணக்கு. இந்த மூன்று காரணங்களால் திமுக பணப்பட்டுவாடாவில் முந்திக் கொண்டது என்கிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios