கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கை திசை திருப்பும் வகையில் உண்மைக்கு மாறாக வீடியோ வெளியிட்டவர்கள் மீதும்  அதற்கு பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் நடந்த மர்மக் கொலைகள் குறித்த ஆதார ஆவண வீடியோவை தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் நேற்று டெல்லியில் வெளியிட்டார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை மேத்யூ கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார். அப்போது, அந்த வீடியோ உண்மைக்கு மாறானது. வீடியோவை வெளியிட்டவர்கள் மீதும், அவர்களது பின்புலம் குறித்தும் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இது குறித்து சென்னை காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கீது புகார் தெரிவித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் 25 முறை நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளாகிறது. அப்போதெல்லாம் நீதிமன்றத்தில் எதையும் அவர்கள் சொல்லவில்லை. 

வரும் பிரவரி 2ம் தேதி அவர்கள் விசாரணைக்கு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. போக்சே சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம், கூலிப்படை, திருட்டு என பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது உள்ளன.  கட்சின் நிர்வாகிகளின் ஆவணங்களை எடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட்டிற்குள் சென்றதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை ஜெயலலிதா அவர்கல் எந்த ஒரு நிர்வாகியிடமும், கட்சியினரிடமும் ஆவணங்களை கேட்டத்தில்லை. அன்பாக பழகக்கூடியவர். உரியவர்களுக்கு பதவி அளிப்பவர். பாரபட்சம் காட்டதவர். அவர் மீது இந்தக் குற்றசாட்டு களங்கம் கற்பிப்பதாக உள்ளது. 

திமுக எதற்கெடுத்தாலும் வழக்குப்போடுகிறது. ஒப்பந்த முறைகேடு வழக்குப்போட்டது அது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தைப்பொங்கல் பரிசு தொகுப்பு நிதி வழங்குவதிலும் அவரது கட்சிக்காரர் ஒருவரை வைத்து வழக்குப்போட்டார்கள். வரும் 23, 24ம் தேதி நடைபெற் உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நிறுத்தவும் வழக்குப்போட்டுள்ளனர். கொடநாடு விவகார வீட்யோவிற்கு பின்புலமாக செயல்படுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என அவர் தெரிவித்தார்.