ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆட்சி! இன்னும் கொடநாடு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியல! ஆளுங்கட்சியை விளாசும் OPS!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம்முடன் பல கட்சிகள் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் சிலர் தனி கட்சி தொடங்குவார் என சொல்லி வருகிறார்கள். எப்போதுமே அதிமுக மட்டும் தான் வாழ்நாள் முழுவதும் அதிமுக தொண்டனாக கட்சிக்கு உழைப்பேன்.

DMK came to power and ruled for 3 years..  kodanad case still did not find the culprit.. ops tvk

கொடநாடு வழக்கு குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் இல்லையென்றால்  தமிழக அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைப்பெற்றது. இதில்  தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்;- தமிழக மக்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும். தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. இதுவரையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கப்படவில்லை. 

இதையும் படிங்க;- இவங்க எல்லாம் பாவப்பட்டவர்களா? இவர்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டாமா? ஓபிஎஸ்..!

DMK came to power and ruled for 3 years..  kodanad case still did not find the culprit.. ops tvk

மேலும் கொடநாடு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லையென்றால் தமிழக அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என பேசினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம்முடன் பல கட்சிகள் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் சிலர் தனி கட்சி தொடங்குவார் என சொல்லி வருகிறார்கள். எப்போதுமே அதிமுக மட்டும் தான் வாழ்நாள் முழுவதும் அதிமுக தொண்டனாக கட்சிக்கு உழைப்பேன் அதற்கான போராட்டத்தில் வெற்றி பெறுவோம்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது,அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி தொண்டர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது. பறிக்கப்பட்ட உரிமையை மீண்டும் தொண்டர்களுக்கு  வழங்கவேண்டும் என்பதற்காக தான் இந்த தர்மயுத்தம், நடைப்பெற்று கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும், பொறுப்பாளர்களும் தார்மீக ஆதரவு அளித்துக்கொண்டு வருகின்றார்கள்.

இதையும் படிங்க;-  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. இபிஎஸ்-க்கு நெருக்கடி? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

DMK came to power and ruled for 3 years..  kodanad case still did not find the culprit.. ops tvk

 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்ற முடிவிற்கு தான் இந்த தேர்தல்  ஏற்கனவே பத்து ஆண்டுகாலம் ஆட்சி செய்த நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும். கொள்கையின் அடிப்படையில் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கின்றோம் உறுதியாக பாரதிய ஜனதா கட்சி் தலைமையில் அமைக்கின்ற கூட்டணியில் உறுதியாக வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios