ஆர்.கே.நகரில் யார் உண்மையான அதிமுக என நிரூபிப்பதில் சசிகலா-பன்னீர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆனாலும், இது திமுகவுக்கும் சவால் விடும் தேர்தலாகவே உள்ளது. அதிமுக மூன்று பட்ட இந்நிலையிலும், திமுக ஜெயிக்க வில்லை என்றால் அது அவமானமாகக் கருதப்படும்.

ஆர்.கே.நகர் நிலவரம் குறித்து ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், திமுகவுக்கு 35 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

அதனால், அதிமுக சிதறி கிடைக்கும் நிலையில், திமுக எப்படியும் ஜெயித்துவிடும் என்று நினைத்தார் ஸ்டாலின். 

ஆனாலும் வாக்குகளை தக்கவைத்து கொள்ள ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அண்மையில் வெளிவந்த கருத்து கணிப்பில் போட்டி என்பது திமுகவுக்கும்-பன்னீர் அணிக்கும்தான். தினகரன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்று கூறப்பட்டது.

மேலும், திமுகவுக்கு 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறியது.

அதனால், ஓட்டுக்கு பணம் வழங்க வேண்டாம் என்று ஸ்டாலின் கூறி விட்டாராம். இதனால் திமுக தொண்டர்கள் அப்செட் ஆனதாக தகவல்.

இதுபோல, சின்ன, சின்ன தவறு செய்துதான் பல இடங்களில் வெற்றி வாய்ப்பை திமுக இழந்தது. ஆனாலும் அதே தவறை மீண்டு திமுக செய்கிறது என்றும் தொண்டர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருமகன் சபரீசன் பேசியபோது, எனக்கு தெரியும் நிச்சயம் திமுகதான் ஜெயிக்கும். அப்படியே சிரமம் என்று தெரிந்தால் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யலாம் அவர் என்று கூறிவிட்டாராம்.

இந்த குழப்பத்தில்தான் திமுக, ஆர்.கே.நகர் களத்தில் போராடி கொண்டிருக்கிறது என்கின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள்.