Asianet News TamilAsianet News Tamil

திமுக- பாஜக கூட்டணியா..??? பொன். ராதாகிருஷ்ணன் நெத்தியடி பதில். ஆடிப்போன அதிமுக

பாஜக மூத்த தலைவரான பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியார்கள் பாஜக திமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்து பேசிய அவர், பிரதமரை திமுக அரசு தமிழகத்திற்கு வரவேற்றிருப்பது பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது. திமுக பாஜக கூட்டணி அமையுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும், நாமாக எதையும் முடிவு செய்ய முடியாது.

DMK BJP alliance .. ??? Pon Radhakrishnan direct Answer. Admk stunning.
Author
Chennai, First Published Jan 5, 2022, 12:24 PM IST

திமுக பாஜக கூட்டணி அமையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  காலம்தான் அதற்கு பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பத்தாண்டுகள் கழித்து தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல் அரசு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அரசு எடுத்து வரும் ஒரு நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் வெள்ள நிவாரண பணியில் அரசு காட்டிய தீவிரம் என அனைத்தும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் திமுகவின் எதிர்க்கட்சிகளான அதிமுக-பாஜக திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதுடன், அதற்காக ஆளும் திமுக அரசை மூர்க்கமாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.

DMK BJP alliance .. ??? Pon Radhakrishnan direct Answer. Admk stunning.

திமுக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்றும், இந்து அறநிலைத்துறை என்பது கோவில்களை சுரண்டும் துறை என்றும் பாஜக குற்றச்சாட்டி வருகிறது. அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றும், அரசுக்கு எதிராக பேசும் பாஜகவினர் குறிவைத்து கைது செய்யப்படுகிறார்கள் என்றும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாத காலமாக தொடர்ந்து பாஜக திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். தமிழகத்தில் ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகள் திறந்து வைக்க உள்ளார்.

DMK BJP alliance .. ??? Pon Radhakrishnan direct Answer. Admk stunning.

மேலும் தமிழகத்தில் மதுரையில் நடைபெற உள்ள பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.  திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கோ-பேக் மொடி என ஹேஸ்டாக் ட்ரெண்ட் செய்து மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய நிலையில், தற்போது மோடியை திமுக வரவேற்க உள்ளது இது அரசியல் தளத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா நிகழ்வாக கருதப்படுகிறது. இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவைகள் பிரதமரை வரவேற்கும் விவகாரத்தில் மாற்றுக் கருத்துடன் இருந்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க தொடர்ந்து ஆளுநர் தமிழக முதலமைச்சரை வெகுவாக பாராட்டி வருகிறார். எதிர் எதிர் துருவங்களாக இருந்த  பாஜகவும் திமுகவும் நெருங்கி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

DMK BJP alliance .. ??? Pon Radhakrishnan direct Answer. Admk stunning.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியார்கள் பாஜக திமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்து பேசிய அவர், பிரதமரை திமுக அரசு தமிழகத்திற்கு வரவேற்றிருப்பது பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது. திமுக பாஜக கூட்டணி அமையுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும், நாமாக எதையும் முடிவு செய்ய முடியாது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் பலமாக கூட்டணியாக இருக்கிறோம். வரும் தேர்தலில் பாஜக மாபெரும் சக்தியாக எழுந்து நிற்கும் என அவர் கூறியுள்ளார். திமுக பாஜக இரண்டும் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து வரும் நிலையில் இரு கட்சிகளுக்கும் கூட்டணி அமைத்தால் பாஜக மேலும் தமிழகத்தில் செல்வாக்கு அடைய வாப்புள்ளதாக பேச்சுக்கள் இருந்து வருகிறது. ஆனாலும் பொன்.ராதா கிருஷ்ணன் அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது என கூறியிருப்பது அதிமுகவினரையே திக்குமுக்காட வைத்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios