Asianet News TamilAsianet News Tamil

டெல்லிக்கு சென்று புஜ பலம் காட்ட உள்ள ஸ்டாலின் !! காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து போராட்டம் !

ஜம்மு - காஷ்மீரில், வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள, அரசியல் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, டெல்லியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர்  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

dmk announce protest in delhi
Author
Chennai, First Published Aug 20, 2019, 7:40 AM IST

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து, சென்னை, அறிவாலயத்தில், திமுக  கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, சில கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வலியுறுத்தின. ஆனால், திமுக  தரப்பில், போராட்டம் தேவையில்லை என, கூறப்பட்டது.

முடிவில் திமுக  கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி,,க்கள், ஸ்டாலின் தலைமையில், டெல்லியில், பிரதமர், மோடியை சந்தித்து, ஜம்மு - காஷ்மீரில், வீட்டுச் சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மோடியை சந்திக்க, அனுமதி கிடைக்கவில்லை.

dmk announce protest in delhi

இதையடுத்து, திமுக  தலைவர், ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜம்மு - காஷ்மீர் தலைவர்களான, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர், ஜனநாயகத்தின் குரலாக நின்று, மக்களுக்கு அரும் பணியாற்றியவர்கள்.

மத்திய அரசு, அவர்களை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்துள்ளது; அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை, பாஜக அரசு, சர்வதேச பிரச்னையாக்கி விட்டது. 

dmk announce protest in delhi

அக்கட்சிக்கு, ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள, அனைத்து தலைவர்களையும், மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 22ம் தேதி, டெல்லி ஜந்தர்மந்தரில், திமுக  உட்பட அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

Follow Us:
Download App:
  • android
  • ios