எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக அதிமுன என இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக,  பாமக,  என்.ஆர்,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன, தேமுதிக மற்றும் தமாகா கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய  யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது, மதிமுக, விசிக, இடது சாரிகள் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி  ஆகிய கட்சிகளுடன்  ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் ஈஸ்வரன் தலைமையிலான கொ.ம.தே.கட்சியுடன் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மூன்று நாள் சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு  இன்று ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார்.

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக- கொ.ம.தே.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.