Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த திருமாவளவன்..! ஜூட் விடுவது கன்பார்ம்!

தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஜூட் விடுவது ஏறக்குறைய உறுதி என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.

DMK Allience out thirumavalavan
Author
Tamil Nadu, First Published Feb 26, 2019, 9:47 AM IST

தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஜூட் விடுவது ஏறக்குறைய உறுதி என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் விசிக இரண்டு தொகுதிகளை கோருகிறது. ஆனால் திமுகவோ ஒரே ஒரு தொகுதி அதுவும் விழுப்புரம் அல்லது திருவள்ளூர் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் திருமாவோ தனக்கு சிதம்பரம் தொகுதி கட்டாயம் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார். ஆனால் திமுகவோ சிதம்பரம் தங்களுக்கு வேண்டும் அப்படி இல்லை என்றால் சிதம்பரத்தை காங்கிரசுக்கு கொடுத்துவிட்டு கடலூரில் திமுக போட்டியிட வேண்டும் என்று கூறி வருகிறது.

 DMK Allience out thirumavalavan

இதனால் தான் கூட்டணி பேச்சு ஆரம்பிக்கும் முன்பே சிதம்பரம் தொகுதி தனது சொந்த தொகுதி அங்கு தான் தான் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் கூறி வருகிறார். தற்போது பேச்சுவார்த்தை தொடங்கி உடன்பாடு எட்டப்படாத நிலையிலும் சிதம்பரம் தொகுதியில் தான், தான் போட்டி என்று பேட்டி அளித்து வருகிறார். இது கூட்டணி தர்மத்தை மீறிய விவகாரம் என்று தி.மு.க பிரமுகர்கள் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எந்த சூழலிலும்  திருமாவுக்கு சிதம்பரத்தை கொடுக்க கூடாது என்று கடலூர் மாவட்ட தி.முக. நிர்வாகிகள் நச்சரித்து வருகின்றனர். DMK Allience out thirumavalavan

அதேபோல் தி.மு.கவும் கூட இந்த முறை வேறு தொகுதிக்கு மாறிக் கொள்ளுங்கள் என்று திருமாவிடம் கூறிப்பார்த்துவிட்டது. மேலும் ஒரே ஒரு தொகுதி தான் என்றும் கூறிவிட்டது. ஆனால் திருமாவோ தனிப்பட்ட செல்வாக்கிலேயே தன்னால் சிதம்பரத்தில் ஜெயிக்க முடியும் என்று கூறி வருகிறார். இந்த நிலையில் தஞ்சையில் திக சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டார். வழக்கமாக திக நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்ளும் வழக்கம் கொண்டவர் திருமாவளவன். ஆனால் அவர் தஞ்சைக்கு சென்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் ஸ்டாலின் தான் என்கிறார்கள். DMK Allience out thirumavalavan

ஒரே மேடையில் தற்போதைய சூழலில் ஸ்டாலினுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க திருமா விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். ஏனென்றால் கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் வேறு ஒரு வழியை பார்க்க வேண்டும் அப்ப ஒரு சூழல் ஏற்பட்டால் ஸ்டாலினுடன் தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்றது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று திருமா கருதி தஞ்சைக்கு செல்லவில்லை என்கிறார்கள். DMK Allience out thirumavalavan

ஆனால் திக தரப்போ தாங்கள் திருமாவளவனை அழைக்கவே இல்லை என்கிறார்கள். ஆனால் உண்மையில் திருமா தான் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் அதனால் தான் திகவில் இருந்து அழைப்பு செல்லவில்லை என்றும் கூறுகிறார்கள். எது அப்படியோ திருமா – ஸ்டாலின் இடையிலான மனக்கசப்பு பிரிவை நோக்கி செல்வதாகவே தெரிகிறது. இந்த மனக்கசப்பு உடனடியாக சரி செய்யப்படவில்லை என்றால் கூட்டணியில் விரிசல் என்கிற செய்தி தலைப்புச் செய்தியாகாமல் ஓயாது என்று சிறுத்தைகள் வீர வசனம் பேசி வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios