திமுக கூட்டணி... திருமாவளவனுக்கு தாறுமாறு பதிலடி கொடுத்த ராமதாஸ்..!
திமுக கூட்டணியில் இடம் இல்லை எனக்கூற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் இல்லை எனக்கூற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெறும் எனக் கூறப்பட்டது. அதேவேளை திமுக பொருளாளர் துரை முருகன் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பெரும் முயற்சி செய்து வந்தார். பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்கிற நிலையில் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு, ’’வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறும் என்பது வெறும் யூகம் தான். நிச்சயமாக திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பில்லை’’ என அவர் தெரிவித்தார். இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுகிறது. இது நாள் வரை திமுகவுடன் கூட்டணிக்காக காத்திருந்த பாமக வேறு கூட்டணியை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
திமுக கூட்டணியில் பாமக இல்லை எனக் கூறியது ராமதாஸ் தரப்பை சூடேற்றி இருக்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெறுகிறோமோ... இல்லையோ? அதைப்பற்றி கூற திருமாவளனுக்கு என்ன உரிமை இருக்கிறது என பாமகவினர் கொதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் எப்போதும் பட்டும் படாமல் அதேவேளை பொத்தாம் பொதுவாக இல்லாமல், நடக்கும் விஷயங்களுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் கருத்து குறித்து இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில், ’முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே இருக்கும். புத்திசாலிகள் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் சாத்தியமாக்குவார்கள்’ என அவர் தெரிவித்து இருக்கிறார். இது திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாது என திருமாவளவன் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் பதிவு எனக் கூறப்படுகிறது.
முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே இருக்கும். புத்திசாலிகள் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் சாத்தியமாக்குவார்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 3, 2019
- மாவீரன் நெப்போலியன்
அடுத்த பதிவில், ’இருளால் ஒருபோதும் இருளை விரட்ட முடியாது; ஒளியால் தான் அதை செய்ய முடியும். அதேபோல் வெறுப்பால் வெறுப்புணர்வை விரட்ட முடியாது; அன்பால் தான் அதை சாதிக்க முடியும்’’ என கூறியுள்ளார்.
இருளால் ஒருபோதும் இருளை விரட்ட முடியாது; ஒளியால் தான் அதை செய்ய முடியும். அதேபோல் வெறுப்பால் வெறுப்புணர்வை விரட்ட முடியாது; அன்பால் தான் அதை சாதிக்க முடியும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 2, 2019
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
இது திமுகவுக்கான பதிலாக கருதப்படுகிறது. அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியால் திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் கிடைக்காமல் செய்து விட முடியாது. இதுப் உதயசூரியன் சின்னத்தை வைத்துள்ள திமுக எடுத்த முடிவாக இருக்கும் என்கிற அர்த்தத்தில் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாக கூறுகிறார்கள் மாங்கனி கட்சி நிர்வாகிகள்.