பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒரு பக்கம் கொரோனா தொற்றும் வேகமெடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அம்பத்தூர், குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.