திமுக தலைமையிலான கூட்டணியில் பாரி வேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி இணைந்தது. அந்த கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதியை முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகனுக்காக பேசி வாங்கிவிட்டார். 

இதனால் அதிருப்தி அடைந்த பாரி வேந்தர் தேர்தலில் இருந்து விலகிவிடலாம் என முடிவு செய்தார். பெரம்பலூரில் நிற்க  பாரிவேந்தர் தயங்கவே, ‘நிற்பதென்றால் பெரம்பலூரில் நில்லுங்கள். இல்லையென்றால் கூட்டணியே வேண்டாம்’ என்ற அளவுக்கு திமுக தலைமையிடம் இருந்து வார்த்தைகள் வந்திருக்கின்றன.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது . அதன் அடிப்படையில் அக்கட்சி தனது முதல் கட்ட வேலைகளை பெரம்பலூரில் தொடங்கியுள்ளது.