உலகக்கோப்பை கிரிக்கெட்டை கணித்து சொன்ன ஜோதிடர் பாலாஜி  ஹாசன் முன்னர் சொன்ன கருத்துக்களில் இருந்து முரண்பட்டு உல்டாவாக பல்டியடித்து வருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஓராண்டுக்கு முன் அவர், ’’உதயநிதி ஸ்டாலிஉன் அரசியலுக்கு வரமாட்டார். மெரினாவில் சமாதி கிடைத்த தலைவர்களின் வாரிசுகள் இதுவரை முதல்வர் ஆனது இல்லை. இந்தியாவில் இதுவரை துணை முதல்வராக இருந்தவர்கள் யாரும் மீண்டும் முதல்வர் ஆனது இல்லை. 

அவரது ஜாதக படி முதல்வர் ஆக வாய்ப்பு இல்லை. மு.க.ஸ்டாலினின் அரசியல் இனி டி.டி.வி.தினகரனை எதிர்த்தே இருக்கும். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ், ஆகியோர் ஒரு பொருட்டாக இருக்க மாட்டார்கள். கட்சி சட்ட திட்டங்களை பின்பற்றுவதில் உறுதியாக இருப்பார். 
ஸ்டாலின் அவர்கள் ஜாதகப்படி 2024ம் ஆண்டு காலகட்டத்தில் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அக்காலகட்டத்தில் அவரது சகோதரி கனிமொழி சிலகாலம் செயல் தலைவராக இருப்பார். 

மு.க.அழகிரியின் தாக்கம் மிக பெரிய அளவில் இருக்கும். உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார்’’ என்றெல்லாம் கூறி வந்த பாலாஜி ஹாசன், மு.க.ஸ்டாலின் மனைவி துர்க்கா, கனிமொழி ஆகியோரை சந்தித்த பிறகு அப்படியே மாறி இருக்கிறார். அதாவது மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர். அதை யாராலும் தடுக்க முடியாது. ரஜினிகாந்த் அரசியலுக்கே வரமாட்டார். அப்படியே வந்தாலும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

 

விஜய் இப்போது அரசியலுக்கு வரப்போவதில்லை. அஜித் அவர் வாழ்நாளில் அரசியலுக்கு வரவேண்டும் என்றே நினைக்க மாட்டார் என்றெல்லாம் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவர் துர்கா, கனிமொழியை சந்தித்த பிறகே இப்படி மாற்றிப்பேசுவதாகவும், ஸ்டாலின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றும் பாலாஜி மோகன் கூறிவருவதாக பேசப்படுகிறது.