Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறதா..? இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு பதுங்குகிறதா திமுக..?

நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, அதன் பிறகும் சரி அதிமுக மிகவும் பலவீனமாகவே இருந்தது. ஆனால், வேலூர் தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு முன்பை போல அதிமுக கெத்து காட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த இரு தேர்தல்கள் அதிமுகவை உள்ளாட்சித் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள உதவியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால், நாடாளுமன்றத்  தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிவுக்கு பிறகும் உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொள்ள தைரியமாக இருந்த திமுக, இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

DMK afraid to meet local body election?
Author
Chennai, First Published Nov 29, 2019, 10:05 AM IST

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள முன்பு அதிமுகவை அஞ்சுவதைப் போலவே தற்போது திமுகவும் அஞ்சுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது

.DMK afraid to meet local body election?
தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். தேர்தலை அறிவித்த பிறகு வார்டுகள் மறுவரையறை செய்யவில்லை, பழங்குடியினருக்கு முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை உள்ளிட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனையத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து. வார்டுகள் மறுவரையறை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்தத் தடைக்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகளே இல்லாமல் போனது. அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு உள்ள செல்வாக்குக் குறித்த அச்சத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக அஞ்சியது. நீதிமன்றம் பலமுறை கெடு விதித்து உத்தரவிட்டபோதும், தேர்தலை நடத்தாமல் இருக்க மாநில தேர்தல் ஆணையம் பல காரணங்களைத் தேடியது

.DMK afraid to meet local body election?
இறுதியாக இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்று, உள்ளாட்சித்தேர்தலை நடத்த நீதிமன்றம் கெடுவும் விதித்தது. டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் நேற்றுதான் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது.
இதற்கிடையே புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்து தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் திமுக தரப்பில் ஏற்கனவே வாதிடப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ஏற்கனவே தொரடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதையொட்டி தற்போது திமுக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.DMK afraid to meet local body election?
அந்த மனுவில், “ “உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலேயே இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. ஆகவே, தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMK afraid to meet local body election?
இந்த வழக்கை வைத்து பார்க்கும்போது தற்போது திமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள விரும்பவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக பொதுக்கூட்டங்கள், செய்தியாளர்கள் சந்திப்பில் எல்லாம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அச்சப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிவருகிறார். ஆனால், தேர்தல் அறிவிப்பு நெருங்கிவரும் நிலையில் புதிய மனுவை தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.DMK afraid to meet local body election?
நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, அதன் பிறகும் சரி அதிமுக மிகவும் பலவீனமாகவே இருந்தது. ஆனால், வேலூர் தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு முன்பை போல அதிமுக கெத்து காட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த இரு தேர்தல்கள் அதிமுகவை உள்ளாட்சித் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள உதவியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால், நாடாளுமன்றத்  தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிவுக்கு பிறகும் உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொள்ள தைரியமாக இருந்த திமுக, இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மூன்றை ஆண்டுகளாகவே அதிமுக, திமுகவின் கைங்கர்யத்தால் உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது.   

Follow Us:
Download App:
  • android
  • ios