அறந்தாங்கி அதிமுக எம்.எம்.ஏ., ரத்னசபாபதியின் தம்பியும் அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.

 

சென்னை அண்ணா அறிவிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னையில் தன்னை அவர் திமுகவில் இணைத்துக் கொண்டார். ரத்தினசபாபதி அதிமுகவில் இருந்து கொண்டே டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது எம்.எல்.ஏ பதவியை பறிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தான் அதிமுகவில் தான் இருக்கிறேன். தனது ஆதரவு அதிமுகவுக்கே என்று சமாதானம் ஆனார். 

இந்நிலையில் கடந்த தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து அமமுகவில் உள்ளவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பே செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தார். அவர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதேபோல் மாவட்ட பொறுப்பாஅர் பதவியும் வழங்கப்பட்டது. அடுத்து வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார். அவருக்கு இலக்கிய அணி செயலாலர் பதவி வழங்கப்பட்டது. தங்க தமிழ்செல்வன் திமுகவில் இனைந்தார். அவருக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.   

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்து வந்த பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ’’இன்று முதல் இருளில் இருக்கின்ற இந்த தமிழகத்தை ஒளிவிளக்கு ஏற்றி ஏழை எளிய மக்களைன் ப்தேவையற்றிந்து ஆட்சி செய்யக்கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் பணியாற்றிட எஸ்.ரகுபதி முன்னிலையில் திமுகவில் கட்சிபணியாற்றிட ஈடுபடுத்திக் கொண்டேன்’’ என அவர் தெரிவித்தார்.