பதவி சண்டைக்கு பெயர்தான் தர்ம யுத்தமாம் எனவும், ஒபிஎஸ் இபிஎஸ் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த அதிமுக அணிகள் இணைப்பு இன்று நிறைவேறியுள்ளது. 6 மாத இடைவெளிக்கு பிறகு தலைமை அலுவலகம் வந்த பன்னீர் எடப்பாடியுடன் சேர்ந்து அணி இணைப்பை உறுதி செய்தார்.

இதையடுத்து புதிய அமைச்சரவை பட்டிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. அதன்படி இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வராக பதவி பிரமானம் செய்து வைத்தார்.

இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குருமூர்த்தியுடன் அதிமுக தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும், ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் நல்ல நடிகர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இரு அணிகள் இணைப்பு ஏமாற்று வேலை எனவும், ஜெ மரணம் குறித்து கல்லறையில் தியானம் செய்தார் பன்னீர்செல்வம் எனவும், ஸ்ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

ஜெ மரணம் குறித்து மர்மம் வெளிவரவில்லை எனவும், சசிகலாவும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை எனவும், தெரிவித்துள்ளார்.

தர்ம யுத்தம் என்ற பெயரில் பதவி சண்டையை நடத்தியுள்ளதாகவும் ஆட்சியிலும் கட்சியிலும் பதவியை வாங்கிகொண்டு ஜெ மரண      மர்மத்தை அம்போவென விட்டுவிட்டார் ஒபிஎஸ் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.