dmk active leader stalin copy from actor rajinikanth
தமிழக அரசியலில் இப்போது எல்லா தலைவர்களும் பிஸியாக இருக்கிறார்கள். அதிலும் ஸ்டாலினோ அநியாயத்துக்கு பிஸியாக இருக்கிறார்.
லேசாய் அசைந்து கொடுத்து சற்றே அசமந்தமாக அரசியல் செய்து கொண்டிருந்த மனிதர், ரஜினி மற்றும் கமலின் அரசியல் எண்ட்ரி முடிவுகளுக்குப் பிறகு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார்.

தி.மு.க.வில் எல்லா மாவட்டங்களிலும் உட்கட்சிக்குள் ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல்கள் இருப்பதை கண்டுபிடித்திருக்கும் ஸ்டாலின், அவற்றை களைவதற்காக ‘கள ஆய்வு’ எனும் தலைப்பில் ஒவ்வொரு மாவட்ட கழகத்தினராக தனியே சந்தித்து தாறுமாறாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ரசிகர்களில் இருந்து தொண்டர்களாக தான் மாற்ற இருக்கும் தன் ரசிகர் மன்றத்தினரை இம்ப்ரஸ் செய்து தக்க வைத்துக் கொள்ள ரஜினிகாந்த் என்ன செய்தாரோ அதையே இன்று முதல் காப்பி அடிக்க துவங்கியுள்ளாராம் ஸ்டாலின்.
அதாவது இதுவரையில் ஸ்டாலின் கள ஆய்வில் சந்தித்த மாவட்டங்களை சேர்ந்த பல நிர்வாகிகளை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்து, ஆலோசனை மட்டும் கூறிவிட்டு பின் அவர்களுடன் மதிய உணவருந்தி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் இன்றிலிருந்து அவர்கள் அனைவருடனும் தனித்தனியே போட்டோ எடுக்கவும் துவங்கியுள்ளார். இன்று காலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ஸ்டாலின் அவர்களிடமிருந்து இந்த போட்டோ சிஸ்டத்தை துவக்கியுள்ளார். இது கட்சியினரை ஏக குஷியாக்கி உள்ளதாம்.

ஆனாலும், ஸ்டாலினின் இந்த திடீர் மூவ்வை அறிந்த அரசியல் விமர்சகர்கள், ‘எமெர்ஜென்ஸியில் அடிபட்டு அரசியலில் வளர்ந்த நீங்கள் எப்போதோமுதல்வராகி இருக்க வேண்டும்.
அப்பேர்ப்பட்ட நீங்கள் ரஜினியின் ஸ்டைலை காப்பியடிப்பது நன்றாக இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
