Dmk Acting Leader M.k.stalin condemns ops and ttvdinakaran
அதிமுகவினர் ஒன்றாக இருந்த போது தமிழ்நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களை திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். 
அப்போது பேசிய அவர், "அதிமுகவின் கடந்த 6 ஆண்டுகால ஆட்சியில் மீனவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். அதிமுகவினர் 2 அணிகளாக பிரிந்து ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகின்றர். அதிமுகவினர் ஒன்றாக இருந்த போது தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டனர். ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்ற அதிமுகவினர் திட்டம் தீட்டியுள்ளனர்."

"முதல்வர் பதவியில் இருந்த போது ஓ.பி.எஸ். எந்த பிரச்சனையிலும் தலையிடவில்லை. ஓ.பி.எஸ்..,தினகரன் உத்தமர் வேடம் போட்டு ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. முதல்வர் பொறுப்பில் இருந்த போது பன்னீர் செல்வம் மக்களுக்காக என்ன சாதித்தார்.?
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவினர் ஆர்.கே.நகருக்கு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர்.அவற்றில் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறாதா, சீனி சர்க்கரை சித்தப்பா சீட்டில் எழுதி நக்கப்பா என்ற பழமொழி போல இருக்கிறது அதிமுக இரு அணிகளின் செயல்பாடுகள்"....இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
