விஜயகாந்த் அமெரிக்காவில் இருக்கும்போதே கூட்டணியை உறுதி செய்த எல்.கே.சுதீஷ்..!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 12, Feb 2019, 12:40 PM IST
dmdk talks bjp alliance...sudhish information
Highlights

மக்களவை தேர்தலுக்காக பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்காக பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றன. தமிழத்தில் திமுக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் மதிமுக ஒரு அணியாவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து மற்றொரு அணியாக போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி ஏறக்குறைய அறிவிக்கபடாத ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிகவின் கட்சி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணைச் செயலாளரும் விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு கட்சிக்கொடியேற்றினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ’’மக்களவை தேர்தலில் நான் போட்டியிட உள்ளதாகவும், தொகுதி எது என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாடு திரும்பிய உடன் இறுதி செய்யப்படும் என்றார். 

பாஜக-வுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ’’ஆம். உண்மை தான். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரு வாரங்களில் நாடு திரும்பியதும் அவரிடம் அந்த அறிக்கையை அளிப்போம். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும்’’ என்றார்.

loader