தமிழிசை எந்த மாநிலத்துக்கு அவர் ஆளுநராக போக போகிறார் என்பது கூட தெரியாமல்கருத்து சொல்லியது தேமுதிகவினரை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டதை அடுத்து அரசியல் தலைவர்கள் அவருக்கு நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழிசைக்கு அளிக்கப்பட்ட பதவி குறித்து கருத்து கேட்டதற்கு, பதில் அளித்த அவர், " தமிழிசை எங்க வீட்டு பக்கத்து தெருவுலதான் இருக்காங்க. என்னுடைய பெஸ்ட் பிரண்ட் அவங்க. இப்போ "ஆந்திராவின் ஆளுநராக" பதவி கிடைச்சதற்கு முதல் வாழ்த்தை தெரிவித்திருக்கோம். கேப்டனும் போன்ல அவங்களுக்கு விஷ் பண்ணாரு. நாளைக்கு நாங்க ரெண்டுபேரும் நேர்ல போய் பார்த்து விஷ் பண்ணப் போறோம் என்றார். 

ஒரு கட்சியை வழி நடத்தக்கூடிய தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு, கருத்து சொல்லும்போது எந்த மாநிலத்துக்கு தமிழிசை ஆளுநராக போக போகிறார் என்பது கூட தெரியாமல் ஆந்திராவுக்கு என்று சொல்லி விட்டார்.  பிரேமலதா டென்ஷனில் இப்படி  பேசியிருந்தால் கூட பரவாயில்லை.. அதை திரும்பவும் கூட திருத்தி சொல்லாதது தான் சோக சம்பவம். எப்போதுமே விஜயகாந்த்தான் இப்படி தாறுமாறாக பேசி வைப்பார், அது பெரும்பாலும்  பெரிசாக எடுத்து கொண்டு விமர்சிக்கவில்லை. 

விஜயகாந்த் உளறி பேசினாலும், அவரின் உடல்நிலையால் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கேப்டனுக்கு பின் எல்லாமே இவர் தான் என நம்பிக்கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறதே, இதுவரைக்கும் இவரை நம்பியா இங்கு இருந்தோம்? இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல் இப்படி உளறும் ஒருவர் தலைமையிலா இருக்கப்போறோம்? என கட்சியின் எதிர்காலம் நினைத்து குமுறுகின்றனர் தேமுதிகவினர்.