சனிக்கிழமை ஆனா போதும் சின்னராச கையிலயே புடிக்க முடியாது என்ற வசனம் போல,  தேர்தல் வந்துட்டா போதும் ஒரே நேரத்துல மாறி மாறி பேரம் பேசுறது, அதற்கு முன்னாடியே மொத்த தொகுதிக்கும் சேர்த்து விருப்பமனு விநியோகம் பண்ணி கல்லா கட்ட  வேண்டியது, கூட்டணி டீல் பேசி பெட்டி வாங்கவேண்டியது. இப்படி மொத்தமா காச கலைக்ஸன் பண்ணி,சல்லி காசு கூட அவுக்காம வேட்பாளரை கடைசிவரை காத்திருக்க  வைத்துவிட்டு டீலில் விடுவதுதான், தேமுதிகவில் நடந்த கடந்த கால சம்பவங்கள்.

சரி அதையெல்லாம் விடுங்க, அப்படி பேரம் பேசி வாங்கினாலும், ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கறதே இல்ல, அட அது கூட பரவால்ல வங்கியையும் பலப்படுத்தி கொள்ளவில்லை, இனி கட்சியை எப்படி காப்பாற்றுவது என்பதை பற்றி யோசிப்பதுமில்லை. ஆனால் சீட் மட்டும் வேண்டும் என்று கேட்பது நியாயம்? பாமக கூட போட்டிப் போட அப்படி என்ன தான் இவங்களுக்கு தகுதி இருக்கு? இப்படி தேமுதிக  மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்களாம் அதிமுகவினர்.  

அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளை வாங்கிய தேமுதிக மொத்தமாக வாஷ் அவுட் ஆனது. அதேபோல பாமகவும் 7 தொகுதிகளையும் பறிகொடுத்தது. ஆனாலும், கூட்டணிக்காக கையெழுத்து ஒப்பந்தம் போட்ட போதே, ராஜ் சபா சீட்டும் கேட்டு வாங்கி கொண்டது.  அதனால் பாமகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதில் சிக்கல் இருக்காது.ஆனால், தேமுதிகவும் தங்களுக்கு ஒரு ராஜ்ய சபாசீட் கேட்க்கிறாராம் பிரேமலதா. பாஜக மேலிடத்து  தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கம் வைத்துள்ளவர் சுதீஷ், இதற்காக 2 நாட்களாக டெல்லியில் சுதீஷ் டேரா போட்டுள்ளாராம்.

ஆனால், அதிமுகவோ, தேமுதிகவின் திடீர் கோரிக்கையால், பயங்கர கடுப்பில் உள்ளதாம், காரணம், தேர்தலுக்கு முன்பாக கூட்டணி வைக்க காங்கிரஸ் பிஜேபி களத்தில் இறங்கிய நேரத்தில், தேமுதிக நடத்திய கூட்டணி பேரம் அப்பட்டமாக அரங்கேறியது. அதிமுக பிஜேபி கூட்டணியில் சேர ராஜ் சபா பதவி, டபுள் டிஜிட்டல் சீட், கோடிக்கணக்கில் பணம் என மானாவாரியாக பேராசையில் இருந்தார் பிரேமலதா மற்றும் சுதீஷ், ஆனால் கூட்டணி டீல் சரியாக அமையாததால் திமுகவில் பேரம் பேச ஒரு குரூப்பை அனுப்பி, பிஜேபி - அதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்தார் பிரேமலதா.

விடுவாரா துரைமுருகன்? மொத்தமாக மீடியா முன் தேமுதிகவில் பேரத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால், அதிமுகவும் பிஜேபியும் தேமுதிகவின் சுயரூபத்தை புரிந்துகொண்டு தேர்தல் கூட்டணி வைத்தது. இப்படி இருக்கையில் ஒரு தொகுதிகூட ஜெயிக்காமல் ராஜ்ய சபா சீட் கேட்பது என்ன நியாயம்? என அட்வைஸ் அதிமுக கோபத்தில் இருக்கிறதாம்.