ஓவராக பில்டப் காட்டியும், மானாவாரியா பேரம் நடத்தியும் கூட்டணி போட்ட தேமுதிகவும்,  வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி இருப்பதாக சொல்லி 7 சீட் வாங்கி  பாமகவும் இனி எந்த தேர்தலிலும் பேரம் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதைவிட கொடுமை என்னனனா?  விஜயகாந்த் பட்ட கஷ்டமெல்லாம் அனாமத்தா வீணா போயுள்ளது. ஆமாம், தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுத்துள்ளது. 

எக்ஸிட் போல் ரிசல்டில் அதிமுக 8-10 தொகுதிகளிலும், பாஜக 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தேமுதிக 1-2 தொகுதிகளிலும் ஜெயிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்பட்ட நிலையில் மொத்தமாக வாஷ் அவுட் ஆகியுள்ளது.

தேர்தலுக்கு முன்பாக கூட்டணி வைக்க காங்கிரஸ் பிஜேபி களத்தில் இறங்கிய நேரத்தில், தேமுதிக நடத்திய கூட்டணி பேரம் அப்பட்டமாக அரங்கேறியது. அதிமுக பிஜேபி கூட்டணியில் சேர ராஜ் சபா பதவி, டபுள் டிஜிட்டல் சீட், கோடிக்கணக்கில் பணம் என மானாவாரியாக பேராசையில் இருந்தார் பிரேமலதா மற்றும் சுதீஷ், ஆனால் கூட்டணி டீல் சரியாக அமையாததால் திமுகவில் பேரம் பேச ஒரு குரூப்பை அனுப்பி, பிஜேபி - அதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்தார் பிரேமலதா. விடுவாரா துரைமுருகன்? மொத்தமாக மீடியா முன் தேமுதிகவில் பேரத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்ட தேமுதிகவுக்கு வேறு வழியே இல்லாமல், அதிமுக பிஜேபி கூட்டணியில் 4 சீட்டுக்கு மடிந்தது. 

ஆனால் முடிவு, படுதோல்வியை சந்தித்தது இல்லாமல் கடந்த தேர்தல்களில் வாங்கிய வாக்குவங்கியை இழந்துள்ளது. தேமுதிகவின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் பிரேமலதா மற்றும் அவரது தம்பி சுதீஷ் எடுத்த தவறான முடிவுகளே காரணம் என தேமுதிகவினரே என கண்ணீரோடு கதறுகின்றனர்.  

தேமுதிகவின் இந்த கதறலுக்கு காரணம் மாநிலக் கட்சிக்கான அங்கீகாரம் பெற தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி பதிவான வாக்குகளில் குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்ய தேமுதிக தவறி விட்டது. இதனால் அதன் மாநிலக் கட்சி அங்கீகாரம் பறி போகிறது. 

முதல்முறையாக தேர்தல் காலத்துக்கு வந்த விஜயகாந்த் கட்சி 2006 சட்டசபைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று திரும்பி பார்க்க வைத்தார். அதுமட்டுமல்ல அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வென்று எம்.எல்.ஏ ஆனார். இதையெல்லாம் விட அந்த தேர்தலில் வாக்கு சதவீதம் 8.33 வாங்கிய அனைத்து கட்சியையும் விதி பிதுங்க வைத்தது. அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தனித்துப் அவர் விஜயகாந்த். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு 10.3 சதவீத வாக்குகள் கிடைத்தன. முதல் 2 தேர்தலில் அதிமுக திமுகவுக்கு மாற்றாக தண்ணனை நிலைநிறுத்திக்கொண்ட விஜயகாந்த் தடம் மாற ஆரம்பித்தார் அதில் முதல்கட்டமாக திமுகவோடு கைகோர்த்து எதிர்க்கட்சி தலைவரானார்.

அடுத்து அதிமுகவுடன் ஏற்பட்ட மோதலால் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்தார் ஜெயலலிதா. 2015 லோக்சபா தேர்தலில் பிஜேபி, பாமகவுடன் கூட்டணி வைத்ததில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வி தால் கிடைத்தது. வாக்கு சதவீதமும் 5.1 சதவீதமாக இறங்கிப் போனது. இத்தனைக்கும் இது மெகா கூட்டணியாக அமைந்தது. இப்போது இன்னும் மோசமாகி விட்டது நிலைமை. பிஜேபி , அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக ஓவர் பில்டப் காட்டி, ரெண்டு பக்கமும் பேரம் பேசி மக்களை முகம் சுளிக்க வைத்ததால் தேமுதி படு தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல், வெறும் 2.19 சதவீத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

பாவம் விஜயகாந்த் தீயாக வேலை பார்த்து அரும்பாடுபட்டு கட்சியை வளர்த்தார். ஆனால், அவர் தற்போது உடல் நாளாக குறைவால் ஓய்வில் இருப்பதால்  அனைத்து முடிவுகளையும் பிரேமலதா எடுக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் எடுத்த தவறான முடிவுகள், வழிகாட்டுதல்கள் கொள்கையே இல்லாமல் திமுக அதிமுகவில் மாறி மாறி பேரம் நடத்தியதால் என்று தேமுதிக தொண்டர்களே கேவலமாக பேசியதும் நடந்தது. தற்போது மாநிலக் கட்சி அந்தஸ்து பறி போவதால் முரசு சின்னமும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.  சோனமுத்தா போச்சா....?