விஜயகாந்த் மகனுக்கு கல்தா... கள்ளக்குறிச்சியில் களமிறங்கும் எல்.கே.சுதீஷ் ... தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் போட்டியிடுகிறார்.

dmdk candidates announced

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் போட்டியிடுகிறார்.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. dmdk candidates announced

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிக்கும் நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேமுதிக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது என பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகள் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

  dmdk candidates announced

வேட்பாளர் பட்டியல் விவரம்;

1. கள்ளக்குறிச்சி - எல்.கே.சுதீஷ்

2. விருதுநகர் - அப்துல்லா சேட்

3. திருச்சி -இளங்கோவன்

4. வட சென்னை - அழகபுரம் மோகன்ராஜ்

இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகனை தெரிவித்து கள்ளக்குறிச்சியில் களமிறங்குகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகருக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios