Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா? விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை  ஈடுபட உள்ளதாக பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியானது. 

DMDK alliance with BJP? Exciting statement released by Vijayakanth tvk
Author
First Published Nov 5, 2023, 8:38 AM IST | Last Updated Nov 5, 2023, 8:55 AM IST

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதனை திட்டவட்டமாக அக்கட்சி மறுத்துள்ளது.  

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்து  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க அண்ணாமலை பல்வேறு வியூகங்களை வகித்து வருகிறார். பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், பாமக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் இருந்து வந்தது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

DMDK alliance with BJP? Exciting statement released by Vijayakanth tvk

இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை  ஈடுபட உள்ளதாக பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியானது. ஆனால், இதனை தேமுதிக தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

இதையும் படிங்க;- ரஞ்சனா நாச்சியாருக்கு ஒரு சட்டம்.! திமுக எம்எல்ஏவுக்கு ஒரு சட்டமா? நாராயணன் திருப்பதி காட்டமான கேள்வி.!

DMDK alliance with BJP? Exciting statement released by Vijayakanth tvk

இதுதொடர்பாக தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்திக்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடும் (தினமலர்) பத்திரிக்கை கண்டிக்கிறேன். இதுபோன்ற செய்தியை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும்  அதுவரையிலும் இதுபோன்ற வதந்திகளை பரப்பும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios