இயேசு நாதர் சிலுவையைச் சுமந்ததைப் போல, விராலிமலை தொகுதியை நான் சுமந்து கொண்டிருக்கிறேன். என் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். தன்னுடைய மகள் அனன்யாவை பிரசாரத்தில் களமிறக்கியுள்ள விஜயபாஸ்கர், வாக்காளர்களிடம் உருக்கமாகப் பேசி வாக்கு சேகரித்து வருகிறார். அப்படி அவர் உருக்கமாக வாக்கு சேகரித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் விஜயபாஸ்கர் பேசுகையில், “எனக்கும் சர்க்கரை இருக்கிறது, ரத்தக்கொதிப்பு இருக்கிறது. இதற்காக மருந்து, மாத்திரை சாப்பிடுகிறேன். நேரம், காலம் பார்த்து சரியாகச் சாப்பிட்டுவிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

