அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒரு விஷக் கிருமி என்று அண்ணா திராவிடர் கழகபொதுச் செயலாளருமான திவாகரன் கூறியுள்ளார்.
இன்று திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தொண்டர்கள் சிதறிப்போக டிடிவி தினகரன் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் என்பது ஒரு முழுகுகின்ற கப்பல், ஏனென்றால் அதற்க்கு கேப்டன் சரியில்ல, கேப்டன் தான் தோன்றித்த தனமாக இருப்பதாலும், அரசியலில் எல்லோரையும் அடித்துக் கெடுத்தவராக இருக்கிறார். சர்வாதிகாரியாக இருக்கிறார்.

மேலும் பேசிய அவர், அவர் ஒரு கிச்சன் கேபினெட் வைத்துக் கொண்டு, தன்னை நம்பி வந்தவர்களை தொடர்ந்து இம்சை படுத்திக்க கொண்டிருப்பதாக கூறினார். கிட்டத்தட்ட அந்த இம்சை தாங்க முடியாமல் தான் ஒவ்வொருவராக வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் தினகரன் ஒரு விஷக் கிருமி எனக் கூறியுள்ளார்.
அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தினகரனின் வலதுகரமாக இருந்த கரூர் செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றது கூட தினகரனின் டார்ச்சர் தாங்கமுடியாமல் தான் மறைமுகமாக குத்திக் காட்டியுள்ளார்.
