divakaran criticize kamal and rajini political entry

இந்தியாவில் எங்கு சென்று தேர்தலில் போட்டியிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், கமல் தலைமைக்கு தகுதியில்லாதவர் என்பதை அவரது டுவிட்டர் பதிவுகளே காட்டுகின்றன. ரஜினியோ கமலோ ஜெயலலிதா இருந்தபோது வாய் திறந்ததில்லை. ஜெயலலிதா இல்லை என்றதும் ரஜினி, கமல் எல்லாம் தற்போது பேசுகிறார்கள் என திவாகரன் விமர்சித்தார்.

முதன்முறையாக சட்டசபைக்கு செல்லும் தினகரனுக்கு சொல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு, சட்டசபையில் பொறுமை காக்க வேண்டும் என்பதே தினகரனுக்கு நான் கூறும் அறிவுரை என திவாகரன் தெரிவித்தார்.

மேலும், ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்து தினகரன் வெற்றி பெற்றதாக ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றியை கமலும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆர்.கே.நகரில் மட்டுமல்ல.. இந்தியாவில் எங்கு சென்று தேர்தலில் போட்டியிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என திவாகரன் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.