Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை காக்கா பிடிப்பதற்காக, கமலை மிக மோசமாக அசிங்கப்படுத்திய இயக்குநர்: ஆரம்பமானது ஈகோ யுத்தம்.

’தமிழகத்தின் நலனுக்காக, தேவைப்பட்டால் அரசியலில் இணைந்து இயங்க தயார்!’ என்று கமலும், ரஜினியும் சொன்ன டயலாக்தான் இன்று இந்திய அரசியலையே அதிர வைத்துள்ளது. கமலின் அரசியலையும், ரஜினியின் அரசியல் ஏற்பாடுகளையும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. என இரு கட்சிகளுமே கன்னாபின்னாவென திட்டி வரும் நிலையில், இருவரும் இணைந்து நிற்போம்! என கூறியுள்ளதால் திணறிக் கிடக்கின்றன திராவிடக் கட்சிகள். 

director insults kamal
Author
Tamil Nadu, First Published Nov 23, 2019, 5:55 PM IST

’தமிழகத்தின் நலனுக்காக, தேவைப்பட்டால் அரசியலில் இணைந்து இயங்க தயார்!’ என்று கமலும், ரஜினியும் சொன்ன டயலாக்தான் இன்று இந்திய அரசியலையே அதிர வைத்துள்ளது. கமலின் அரசியலையும், ரஜினியின் அரசியல் ஏற்பாடுகளையும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. என இரு கட்சிகளுமே கன்னாபின்னாவென திட்டி வரும் நிலையில், இருவரும் இணைந்து நிற்போம்! என கூறியுள்ளதால் திணறிக் கிடக்கின்றன திராவிடக் கட்சிகள். 

director insults kamal
எந்த காலத்திலும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து அரசியல் செய்துவிட கூடாது என்பதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தெளிவாய் இருக்கின்றன. இதற்காக எந்த உச்சத்துக்கும் சென்று, உள்ளடி வேலை பார்த்திட தயாராய் இருக்கிறார்கள். இந்த சூழலில் ‘இணைந்த அரசியலுக்கு’ கமலும், ரஜினியும் முதல் புள்ளி வைத்த துவங்கிய நிலையிலேயே அவர்களை சார்ந்தவர்கள், ஈகோ கொண்டு மோத துவங்கியுள்ளதுதான் ஹைலைட்டே. கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் முக்கிய நிர்வாகியும், ரஜினியுடன் பல படங்களில் ஜோடி போட்டவருமான ஸ்ரீப்ரியா “இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து அரசியல் செய்தால் வெற்றி நிச்சயம். ஆனால், முதல்வராக கமல்தான் வரவேண்டும்! இது எனது விருப்பம்.” என்று ஒரு பட்டாஸை பற்ற வைத்தார். 

director insults kamal
இது ரஜினி தரப்பை கடும் டென்ஷனாக்கிவிட்டது. ’ஸ்ரீப்ரியாவின் வார்த்தை அவருடையதல்ல, அவரை அப்படி பேச வைத்திருக்கிறது அவரது கட்சியின் தலைமை!’ என்று ரஜினியிடம் கமலைப் பற்றி போட்டுக் கொடுத்தனர் சிலர். இந்த நிலையில் இதற்கு பல மடங்கு பதிலடியை தந்திருக்கிறது ரஜினியின் வட்டாரம். ரஜினியின் வெறித்தனமான ஃபேனான இயக்குநர் பிரவீன் காந்தி, சூப்பர் ஸ்டாரின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக என்ன பேசியிருக்கிறார் தெரியுமா?....... “கருப்புத் தங்கம் ரஜினி, வெள்ளைத் தங்கம் கமல் இருவரும் அரசியலில் இணைந்தால் அது திராவிடத்திற்கு முற்றுப் புள்ளிதான். தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கிய திராவிட கழகங்களிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க இருவரின் இணைப்பே மூலதனம். தமிழகத்துக்கு பெரிய நன்மை செய்யும் எண்ணம் ரஜினி, கமல் இருவருக்கும் வந்துவிட்டது. ஆனால்.... கமல், சினிமா உலகில் ரஜினிக்கு முந்தி வந்தவர். ஆனால் இயற்கையோ பிந்தி வந்த ரஜினிக்கே முதலிடம் கொடுத்தது. அதேபோல் அரசியலிலும் ரஜினிக்கு முன்பே வந்துவிட்டார் கமல். ஆனால் இங்கும் கமலை விட ரஜினிக்கே மக்கள் ஆதரவு அதிகம். சினிமா, அரசியல் இரண்டிலும் ரஜினிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார் கமல். நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற  போட்டி இருந்ததால்தான் சினிமாவில் இருவரும் பிரிய வேண்டிய சூழல் வந்தது. 

director insults kamal
ஆனால் அரசியலில், கமல் நிச்சயம் ரஜினிக்காக விட்டுக் கொடுப்பார் என்று நம்புகிறேன். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் ரஜினி, கமல் இருவரும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், ரஜினிதான் நிச்சய்ம அதிக இடங்களைப் பிடிப்பார். அதனால், ஆட்சியில் அவரே முதல்வராவார், முதலமைச்சராவார். அதற்கு அடுத்த இடத்தில்தான் கமல் இருப்பார். இதையெல்லாம் நன்கு யோசித்துவிட்டுதான், இருவரும் ‘அரசியலில் தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம்’ எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என நினைக்கிறேன்.” என்று பட்டாஸாக வெடித்துள்ளார். ரஜினியை இம்ப்ரஸ் பண்ணவோ, அல்லது பெருமைப்படுத்தவோ வேண்டி, கமலை மிக கேவலமாக பிரவீன்காந்தி பேசியுள்ளார்! என்று அரசியல் வல்லுநர்கள் இதை பார்க்கிறார்கள். ரஜினியிடம் கமலை சிலர் போட்டுக் கொடுத்தது போலவே, பிரவினின் கருத்தை ரஜினியின் கருத்தாகவே கமலிடம் போட்டுக் கொடுத்துள்ளனர் அவருக்கு வேண்டிய சிலர். ஆக அமர்க்களமாக துவங்கிவிட்டது ஈகோ யுத்தம்!

Follow Us:
Download App:
  • android
  • ios