துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் என்னை பார்த்தால் இந்த சூழலில் தூத்துக்குடி மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள்  வரவேற்பளித்தனர். பின் பத்திரிக்காவல்துறையினரை தாக்கியவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். அவர்களின் புகைப்படத்தை பேப்பர் மற்றும் டிவி சேனல்களில் வெளியிட வேண்டும் எனக் கூறினார். நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் தனித்தனி போலீஸா போடமுடியும் காவல்துறையினர் மீது தாக்குபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென காட்டமாக பதில் சொன்னார் ரஜினி

எல்லாத்துக்கும்  ராஜினாமா என்பதை ஏற்க முடியாது. பிரச்சனைக்கு தீர்வுகாண போராட்டம் மட்டும் வழிகிடையாது எனக்கூறியுள்ளார். விஷமிகள் புகுந்து நாசக்கார வேலைகளை செய்துள்ளனர் எனப் பேசியிருந்தார்

இப்பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் பத்திரிக்கையாளர்கள் மீண்டும் அவரை சென்னை விமான நிலையத்தில் இந்த கண்டனங்கள் குறித்து கேள்வி கேட்ட போது மிக ஆவேசமாக பதில் சொன்னார். காவல்துறை மீது கல் எறிந்ததால்தான் பிரச்சனை தொடங்கியது. என்று கூறியவர் மக்கள் போராட்டம் போராட்டம் என்று போனால் நாடு சுடுகாடாகிவிடும் என பதில் சொன்னார். மீண்டும் மீண்டும் அழுந்த்த்திருத்தமாக இது சமூக விரோதிகள் செயல் என  பேசினார்.

காலையில் நடிகராக சென்றவர் மாலையில் முழு நேர அரசியல்வாதியாக திருப்பியிருக்கிறார் என இயக்குநர் அமீர் கூறினார். எச்.ராஜா, எஸ்.வி சேகர் ஆகியோர் வாய் திறக்காத குறையை ரஜினி தீர்த்துவைத்துவிட்டார் எனக்கூறினார்.