கட்சியை கலைத்து விட்டு ஒழுங்காக ஊர் போய்ச்சேரு என டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா எர்ர்சரிக்கை விடுத்ததாக அதிமுக நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

 

‘தங்கத்தை பழிக்கும் யோக்கியதை துருப்பிடித்த தகரத்துக்கு உண்டோ...’ என்கிற தலைப்பில் வெளியாகி உள்ள அந்தக் கட்டுரையில், ’’சின்னாத்தா வசம் இருக்கும் சில்லறையை என்னாத்த சொல்லி கறக்கலாம் என்பதிலேயே வெளியாக இருக்கும் டோக்கன் பார்ட்டி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் 22 சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் செலவு என்ற வகையில் கறந்த தொகையில் பல நூறு கோடிகளை கணக்கு எழுதி கபளீகரம் செய்து விட்டாரம்.

இதற்காக சிறை வாசலில் வைத்தே செவியில் ரத்தம் வழியும் அளவுக்கு ஸ்மால் மதர் திட்டித் தீர்த்தாரம். ஒழுங்க கட்சியை கலைச்சிப்புட்டு ஊர் போய் சேரு என உக்கிரமா கத்தினாராம். ஆனால் டோக்கன் பார்ட்டியோ 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை ஆமமூக்கன் கட்சியை நடத்தியே தீர்வேன் என்று அடம்பிடித்தாராம். 

மேலும் அதற்கு அறிவாலய தரப்பிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கிய விபரங்களையும், உள்ளாட்சி மற்றும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆமமூக்கன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மொத்த செலவையும் திருவாளர் துண்டுச்சீட்டு செட்டில் செய்வதாக உறுதி தந்திருக்கும் விபரத்தையும் எடுத்து சொல்ல ஒரு கணம் அதிர்ந்து போன ஸ்மால் மதர் அடப்பாவி உன்னை தமிழ் நாட்டு பக்கமே தல காட்டக் கூடாதுன்னு பத்து வருஷன் பாண்டிச்சேரி பக்கமா பத்தி விட்டது எவ்வளவு சரியான நடவடிக்கை என்று இப்பத்தான் புரியுது என்றவர்

இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம்ம மாஃபியா குடும்பத்துல ஏழைகளே இருக்க மாட்டார்கள் என்கிற அளவுக்கு ‘எந்தக் கட்சியின் பெயரை சொல்லி ஆஸ்திகளை அள்ளிக் குவித்தோமோ’’ அந்தக் கட்சிக்கு எதிராக எதிராளிகளிடமே டீல் போடுறீயே இந்த பாவம் நம்மள சும்மா விடுமா என்றெல்லாம் ஒப்பாரி விட்டு அழுதபோதும் சிரிச்ச வாயரோ அதெல்லாம் முடியாதுன்னு முறச்சிக்கிட்டு நின்னாராம். . ஆனால் உள்ளே நடந்த விபரங்களையெல்லாம் மறந்து விட்டு வெளியே வந்து என்னை எங்க சின்னம்மா வெகுவாக பாராட்டிச்சு. உச்சி முகர்ந்துச்சுனு பொய்யை அள்ளி விட்டாராம் டோக்கன் பார்ட்டி’’ எனத் தெரிவித்துள்ளது.