தோல்வி பயம் வந்துவிட்டது எடப்பாடிக்கு, எங்களை வீழ்த்த என்ன செய்வார் தெரியுமா?: தாறுமாறு பீதியில் தினகரன் வேட்பாளர்கள். 

இருபது தொகுதியில் இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க., தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வும் தயாராகி நிற்கிறது. இந்த தேர்தலில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆளுங்கட்சி தோற்க வேண்டும்! என்று பெரும் ஆசையில் இருக்கிறது தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. காரணம்? அப்படி நடந்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதுதான். 

ஆனால் அதேவேளையில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு வேறொரு பயமும் இருக்கிறது. அது என்ன தெரியுமா?....”சின்னம்மா மற்றும் டி.டி.வி. பின்னாடி போன எங்கள் எல்லோரையும் அரசியலைவிட்டே காலி பண்ணும் எண்ணத்தில்தான் எடப்பாடி தரப்பு இருக்கிறது. 

இப்போ எங்களுடைய சந்தேகமே ஒன்றுதான். அதாவது தேர்தல் நடந்தால் ஜெயிப்போம்! அதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால், தோல்வி பயம் இப்போதே தொற்றிக் கொண்டுவிட்ட எடப்பாடி பழனிசாமி, எங்களை தேர்தலில் போட்டியிட விடுவாரா? என்பதுதான். 
மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மாநில அரசு இயந்திரம் அப்படின்னு எல்லாமே எடப்பாடியார் தரப்புக்கு ஆதரவாக இருக்குது. இந்த நிலையில, நாங்க தேர்தல்ல போட்டியிடும்போது, அவர்களால் நியமிக்கப்படும் தேர்தல் அதிகாரிகளை வெச்சு எங்களோட வேட்புமனுக்களை நிராகரிக்கும் வாய்ப்பு இருக்குது.

அந்த பயம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எங்கள் 18 பேருக்குமே இருக்குது. இதுதான் எங்களோட யோசனையே! அதனால், நாங்க தேர்தல்ல போட்டியிட முடியுமா? முடியாதான்னு ஒரு டவுட் இருக்குது. இதற்கு விளக்கம் தேவை. அதை உச்சநீதிமன்றத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும். இதை அண்ணன் தினகரனும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த விளக்கத்தை வாங்குறதுக்கான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.” என்றிருக்கிறார் தங்கதமிழ்செல்வன். 

தினகரன் அணியின் இந்த அதிரடி யோசனைகளும், முடிவுகளும் ஆளும் தரப்பை அதிர வைத்திருக்கின்றன. காரணம், வேண்டாத நபர் போட்டியிட்டால் அவரது வேட்புமனுவை ஏதாவது குறை சொல்லி நிராகரிப்பதென்பது தமிழக அரசியலில் நெடுநாள் வழக்கம். அதை முன்கூட்டியே யோசித்து, அதற்கு சுப்ரீம் கோர்ட் வழியே ஒரு தீர்வையும் தேட நினைக்கும் தினகரன் அணியை பார்த்து உண்மையிலேயே மிரள்கிறது ஆளும் தரப்பு.