மோடி யார்.? காமராஜர் யார்.? மக்களுக்கு நன்றாக தெரியும்... அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்

அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு அதிமுகவுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது என்பது உண்மைதான். விழாவிற்கு செல்வது குறித்து சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Dindigul Srinivasan said that the AIADMK leadership will discuss and take a decision about participating in the Ram temple program KAK

அதிமுக- பாஜக கூட்டணி

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டியபட்டியில் ரூ 38 லட்சம் செலவில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கிரகப்பிரவேச வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு சாப்பாடு சரியில்லை எனக் கூறுவது போல், என் டி ஏ கூட்டணியில் 9 வருடங்கள் இருந்து விட்டு அதிமுக வெளியே வந்ததாக, பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,

அண்ணாமலை அவருடைய கட்சியின் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். நாங்கள் ஏன் வெளியே வந்தோம் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக தெரிவித்துள்ளார். திருப்பி திருப்பி கூற வேண்டிய அவசியம் கிடையாது ஏன்  வெளியே வந்தோம் என தமிழக மக்களுக்கும் அதிமுகவினருக்கும் நன்றாக தெரியும் என கூறினார். 

Dindigul Srinivasan said that the AIADMK leadership will discuss and take a decision about participating in the Ram temple program KAK

ராமர் கோயில் விழா

காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு  அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், காமராஜர் யார் மற்றவர்கள் யார் என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரியும் இது குறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு அதிமுகவுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது என்பது உண்மைதான். விழாவிற்கு செல்வது குறித்து சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜக விற்கும் இடையே தான் கடுமையான போட்டி உள்ளது என அண்ணாமலை கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு,  ஓட்டு எண்ணும் பொழுது தான் எந்த கட்சி எங்கெங்கே உள்ளது என்பது தெரியவரும்.

கூட்டணிக்கான கதவு திறந்து தான் உள்ளது என அண்ணாமலை கூறியது குறித்த கேட்ட கேள்விக்கு , அவர் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது தெரியாது நாங்கள் பாஜக  கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

சபரிமலையில் 20 மணி நேரமாக காத்திருப்பு! கூண்டில் அடைக்கப்படும் பக்தர்களுக்கு உணவு,தண்ணீர் இல்லை- ஓபிஎஸ் ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios