Asianet News TamilAsianet News Tamil

’இப்பழம் தோற்கின் எப்பழம் வெல்லும்’...திரும்பத் திரும்ப மாம்பழத்திற்குப் பதில் ஆப்பிள் பழத்துக்கு ஓட்டுக் கேட்கும் திண்டுக்கல் சீனிவாசன்...

இது ஏப்ரல் 1ம் தேதிக்கான செய்தியோ என்று கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாம்பலம் சாப்பிடுவதைவிட ஆப்பிள் பழம் சாப்பிட மிக ஆர்வமாக இருப்பதால் தங்கள்கட்சியின் சின்னத்தை ஆப்பிள் பழமாக மாற்றிவிடலாமா என்று பெரிய டாக்டரய்யாவும் சின்ன டாக்டரய்யாவும் ’பலமாக’ யோசித்து வருவதாக பலப்பல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

dindigul seenivasan asks vote for apple instead of mango
Author
Dindigul, First Published Apr 1, 2019, 3:29 PM IST

இது ஏப்ரல் 1ம் தேதிக்கான செய்தியோ என்று கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாம்பலம் சாப்பிடுவதைவிட ஆப்பிள் பழம் சாப்பிட மிக ஆர்வமாக இருப்பதால் தங்கள்கட்சியின் சின்னத்தை ஆப்பிள் பழமாக மாற்றிவிடலாமா என்று பெரிய டாக்டரய்யாவும் சின்ன டாக்டரய்யாவும் ’பலமாக’ யோசித்து வருவதாக பலப்பல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.dindigul seenivasan asks vote for apple instead of mango

திண்டுக்கல்லில் நேற்று பாமக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டங் ஸ்லிப்பாகி மூன்றாவது முறையாக மாம்பலம் சின்னத்திற்குப் பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதால் வேட்பாளர் சற்றே தலை கிறுகிறுத்துப்போனார்.

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பாமக சார்பில் ஜோதி முத்து போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அனுமந்த நகர், மாலைப்பட்டி, தோட்டனூத்து உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தவறுதலாக பேசினார். 

இதற்கு முன்னர் கன்னிவாடி மந்தை திடலில் வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ''இப்படை தோற்கின் எப்படை வெல்லும். நமது கூட்டணி வேட்பாளர் ஜோதிமுத்துவுக்காக ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள்'' என்றார்.dindigul seenivasan asks vote for apple instead of mango

உடனே பின்னால் இருந்த அமைச்சரின் உதவியாளரும், கூட்டத்தில் இருந்தவர்களும் மாம்பழம் சின்னம் எனக் கோஷமிட சிரித்துக் கொண்டே தலையில் லேசாக தட்டிக் கொண்டு மாம்பழச் சின்னம் எனக் கூறினார். இதனால் லேசான சிரிப்பலை எழுந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் ஜோதிமுத்து, இறுக்கமான முகத்துடன் வேறு வழியில்லாமல் சிரித்தபடி வாக்கு சேகரித்தார். கடந்த 22ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது.

ஸோ மூன்றாவது முறையாக திண்டுக்கல்லார் வாயில் மாம்பலம் வராமல் தொடர்ந்து ஆப்பிள் பழமே வந்துகொண்டிருப்பதால் தங்கள் சின்னத்தை அட்லீஸ்ட் அடுத்த தேர்தலிலாவது மாம்பலத்திலிருந்து ஆப்பிள் பழத்திற்கு டாக்டரய்யாக்கள் மாற்றினால் நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios