Asianet News TamilAsianet News Tamil

தினகரனுக்கு சேர்ந்த கூட்டம் தானா சேர்ந்ததா? இல்ல தள்ளிக்கினு வந்ததா?: ஆராய்ச்சி செய்து அதிர்ச்சியில் உறைந்த அதிகாரவர்க்கம்.

Dinakarans meeting has been included Research is a shocking bureaucracy
Dinakarans meeting has been included Research is a shocking bureaucracy
Author
First Published Feb 6, 2018, 2:53 PM IST


பாப்கார்னை ஒளிச்சு வெச்சுட்டா தியேட்டர்ல படம் ஓடாது! என்று எவனோ கொடுத்த படு மொக்க ஐடியாவை போல், கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு தொப்பி சின்னத்தை  தர மறுத்தது அதிகார வர்க்கம். குக்கர் சின்னத்தை வழங்கி குதூகழித்தனர். ஆனால் அம்புட்டு பேரையும் அதில் வைத்து அவித்துவிட்டு அமோகமாக வென்றுவிட்டார் தினா.

Dinakarans meeting has been included Research is a shocking bureaucracy

ஆர்.கே.நகர் அலப்பறைகள் முடிந்து ஒரு வழியாக ’நெக்ஸ்ட்டு, ரெஸ்ட்டு’ என்று அமர எத்தனிப்பார் என்று பார்த்தால் மனிதர் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை கெத்தாக துவக்கிவிட்டார்.

சொந்த மண்ணான தஞ்சாவூரில் சுற்றுப் பயணத்தை துவக்கியிருக்கும் தினாவுக்கு போகுமிடமெல்லாம் மானாவாரியாக கூட்டம் கூடுகிறது. பெருங்கூட்டத்தின் மத்தியில் ”அம்மாவின் மரணத்துக்குப் பின் ‘இது அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள், அன்று அம்மா எந்தெந்த பிரச்னைகளெல்லாம் தமிழகத்து வரவிடாமல் போராடி தடுத்தார்களோ அவை அத்தனையையும் உள்ளே வர அனுமதித்துள்ளனர். மக்களை வாட்டியெடுக்கும் இந்த அரசாங்கம் விரைவில் முடிவை எட்டினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் வரும்.” என்று போட்டுத் தாக்கிவிட்டு நகர்கிறார்.

Dinakarans meeting has been included Research is a shocking bureaucracy

தினகரனின் புரட்சிப் பயணம் மெய்யாலுமே ஆளும் அணியை மெர்சலாக்கி உள்ளது. ‘ஆர்.கே.நகரில் தினகரனுக்கு விழுந்த ஓட்டு எல்லாம் விலைக்கு வாங்கப்பட்டது.’ என்று சாடும் இவர்களால் புரட்சிப் பயணத்தில் கூடும் கூட்டத்தை ‘காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம்’ என்று பரப்புரை செய்ய முடியவில்லை.

தினகரனுக்கு எவ்வளவு பேர் கூடுகிறார்கள்? என்பதை உளவுத்துறையை முடுக்கிவிட்டு கணக்கெடுத்துப் பார்த்திருக்கின்றனர். ரிசல்ட்டை பார்த்து கவலையில் கன்னத்தில் கைவைத்துக் கொண்டார்களாம். காரணம் அந்தளவுக்கு கட்டி ஏறுகிறது கூட்டம்.

Dinakarans meeting has been included Research is a shocking bureaucracy

இது இப்படியிருக்க, தினகரன் ஒரு ஏரியாவுக்கு சுற்றுப் பயணம் வரும் முன்னதாக, அந்த ஏரியாவுக்கு ஏற்றார் போல் வார்த்தைகளை போட்டுப் பொளந்து அவருக்கு பெப் ஏற்றிக் கொண்டே இந்த பயணத்தை வெற்றிகரமாக்குவதில் குறியாக இருக்கிறது அவரது டீம். குறிப்பாக, கும்பகோணத்தில் ‘ஆர்.கே.நகரில் அண்ணனுக்கு வெற்றியை அள்ளித்தந்த சிறுபான்மை சகோக்களுக்கு நன்றி! சிறுபான்மையினரின் காவலரே! இஸ்லாமியர்களின் பாதுகாவலரே!’ என்று பார்த்துப் பார்த்து பிட்டு போடுகின்றனர்.  இதற்கு ஏரியாவாசிகள் மத்தியில் ஏக வரவேற்புதான்.

ஆனாலும் ஆளும் வர்க்கத்துக்கு சந்தேகம் தீரவிலை. முதல்  கட்ட பயணத்தில் தினகரனுக்கு கூடிய கூட்டம் அழைத்து வரப்பட்டதா? என்று கேட்டார்களாம். அதற்கு ‘இல்ல. தானா சேர்ந்தது’ என்று பதில் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios