ஆர்.கே.நகர் இடை தேர்தலை ஒட்டி, காட்சி ஊடகம் தொடங்கி அச்சு ஊடகம் வரை, கருத்துக் கணிப்பு என்று சொல்லி, தினமும் ஏதாவது ஒரு தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் குழு ஒன்று, ஆர்.கே.நகரில் நடத்திய கருத்துக் கணிப்பில், நோட்டாவை விட குறைவான வாக்குகளைதான் தினகரன் பெறுவார் என்று தெரிவித்துள்ளது.

தேர்தலில், எந்த கட்சிக்கும், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள். இது கடந்த சில தேர்தல்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட ஒரு தேசிய கட்சி, பல தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று நகைப்புக்குள்ளானது.

அதேபோல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுகவுக்கும் பன்னீர் அணிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது என்றும் இருவருக்கும் நூலிழை அளவு வித்யாசம் மட்டுமே, அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. 

தினகரனும், தீபாவும் டெபாசிட் வாங்குவதே சிரமம் என்று கூறும் அந்த கணிப்பு, இருவரும், நோட்டாவைவிட குறைவான வாக்குகளைதான் பெறுவார் என்று,  அடித்து கூறுகிறது.

எனவே, நோட்டாவை தோற்கடிக்கவே தினகரன் கடுமையாக போராடி வருகிறார் என்றும் மூத்த பத்திரிகையாளர் குழு கூறுகிறது.

முன்னணி ஊடகங்கள் தொடங்கி, பின்னணி ஊடகங்கள் வரை அனைவரும் தங்கள் கருத்துக் கணிப்பை சொல்லிவிட்டனர். இந்நிலையில் இவர்கள் கூறுவதையும் கேட்டு வைப்போமே..