Dinakaran the period of imprisonment is coming soon
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலாவும், டி.டி.வி. தினகரனும்தான் காரணம் என்பது உண்மை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, அதிமுக பல்வேறு அணிகளாக பிளவு அடைந்தது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., டிடிவி தினகரன் என்று அணிகளாக சிதறின. ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் அண்மையில் இணைந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு, ஓ.பி.எஸ்.-க்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும், டிடிவி தினகரனும்தான் காரணம் என்பது உண்மை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத டி.டி.வி. தினகரன் எங்களை நீக்குவேன் என்கிறார். டி.டி.வி. தினகரன் வெகு விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்லும் காலம் வரப்போகிறது என்றம் வெல்லமண்டி நடராஜன் அப்போது கூறினார்.
சடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதா மரணம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் புகார் கூறிய நிலையில், வெல்லமண்டி நடராஜனும் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
