dinakaran supporters believe only karnataka police
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், பழனிச்சாமி அரசு மீதான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்றைக்குள் விளக்கமளிக்குமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். ஆனால் குடகில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், நேரில் வந்து விளக்கமளிக்க கால அவகாசம் கேட்டுள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான வெற்றிவேலும் அவரது வழக்கறிஞரும் சபாநாயகர் தனபாலை சந்தித்து கால அவகாசம் கோரும் மனுவை கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் விளக்கமளிக்க தயாராக உள்ளதாகவும் ஆனால் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இல்லாததால் கர்நாடக போலீஸ்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பாக வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு போலீஸ் மேல நம்பிக்கை இல்லையாம்… கர்நாடக போலீஸ்தான் வேணுமாம்… என்ன கொடுமை இதெல்லாம்?
