சசிகலாவுக்காக சிறப்பு பூஜை நடத்த, அமைச்சர் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் வந்ததால் ஷாக்கான அமமுக  புள்ளிகள் தினகரனுக்கு சொல்லவே, சித்தி ரிலீஸ் ஆகும் சமயம் பார்த்து இப்படி செய்கிறார்களாம் இந்த எடப்பாடியும் அமைச்சர்களும்? என மல்லாக்கா படுத்து புலம்புகிறாராம்.

சசிகலா ஜெயிலில் தான் இருக்கிறார் ஆனா, அவருக்கான முக்கியத்துவம் இன்னமும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. ஆமாம், சசிகலாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல நேரில் சென்ற தினகரன் கிருஷ்ணகிரி வரை சென்று அனுமதி இல்லை என தெரிந்ததும் திரும்பிவிட்டார் என்ற செய்தி மட்டும் தான் மாமுகவில் இருந்தது அவர் சென்னை வந்து சேர்வதற்குள் பல அதிர்ச்சியான சம்பவங்கள் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சைவ-வைணவத் திருக்கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் என ஸ்பெஷலாக நடந்துள்ளது தான் அந்த ஷாக். இதிலென்ன ஷாக் இருக்கு புது வெறும் பர்த்டே பூஜை தானே? அதுவும் சித்துக்கு நடத்துவதால் தினகரனுக்கு என்ன ஷாக் என கேட்கலாம். நடத்தியது அமமுக புள்ளிகள் இல்லை, நடத்தியதே அமைச்சர்கள் சொல்லி தானாம்.  

சசிகலாவுக்கு வு 68-வது பிறந்த நாளில் மவுன விரதம் கடைப்பிடித்த படி, நாள் முழுக்க ஏதோ சிந்தனையிலேயே இருந்த அவர். ரிலீஸ் ஆகாமல் ஜெயிலில் இருந்தாலும், நேரடி அதிகாரம் கையை விட்டுப் போய்விட்டாலும், சசிகலாவுக்குன்னு இன்னமும் தமிழக அரசு அதிகாரத்தில் ஒரு பவர் இருக்குதுங்கிறதை அவர் பிறந்தநாளில் கண்கூடாக பார்க்க முடிந்தது. 

ஜெ. இருக்கும்போது, ஜெ-சசி ரெண்டு பேரின் பிறந்த நாளில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சைவ-வைணவத் திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகளை ஏற்பாடு செய்வார் சசிகலா.அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளும் அர்ச்சகர்களும் அதற்கான வேலைகளில் ஜரூரா களமிறங்கி அம்மா சின்னம்மாவுக்காக அலகு குத்திக்கொண்டும் வழிபடும் சம்பவங்களும் நடக்கும். கடந்த 2016 செப்டம்பரில் ஜெ.’அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சமயத்திலும், சசிகலா உத்தரவுப்படி, தமிழகம் முழுக்க ஒரே நாள்ல அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள்லயும் காலை 6-ல் இருந்து 7 மணிக்குள் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடந்தது. 

அர்ச்சகர்களும், அதிகாரிகளும் சசிகலா பிறந்தநாளான ஆகஸ்ட் 18 அன்று ஸ்பெஷலா வேத மந்திரங்கள் ஓதி பூஜை நடத்துவது வழக்கம்.

பவரில் இருந்தப்ப ஜெ-சசிக்கு ஸ்பெஷல் பூஜைகள் நடந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தொடங்கி, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சமயபுரம், மன்னார்குடின்னு பல இடங்களிலும் சசி குடும்பத்தார் சொன்னபடி சிறப்பு பூஜை நடந்ததாம். திருவண்ணாமலை கோயில் பூஜை பற்றி மாவட்டத்தை சேர்ந்த அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கவனத்துக்குப் சென்றுள்ளது. அமைச்சர் தரப்போ வழக்கமா என்ன நடக்குமோ அதைச் செய்திடுங்கன்னு என கிரீன் சிக்னல் வந்ததாம். சசிக்கான சிறப்பு பூஜைகளுக்கு எடப்பாடி அரசின் பூரண ஒத்துழைப்பு இருந்திருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதை உற்று கவனித்த அமமுக புள்ளிகள் தினகரனுக்கு சொல்லவே, சித்தி ரிலீஸ் ஆகும் சமயம் பார்த்து இப்படி செய்கிறார்களா  இந்த எடப்பாடியும் அமைச்சர்களும்? என மல்லாக்கா படுத்து புலம்புகிறாராம்.