Asianet News TamilAsianet News Tamil

இதுதான் தினகரனின் சபதம்... இனி நடக்கப்போவது என்ன?

dinakaran open challenge to edappadi palanisamy team
dinakaran open challenge to edappadi palanisamy team
Author
First Published Dec 30, 2017, 4:24 PM IST


ஆதரவாக இருந்த 18 பேரும் தகுதி நீக்கம், ஆளுங்கட்சி எதிர்ப்பு... இவ்வளவு சவால்களை மீறி... ஒரே ஒரு எம்.எல்.ஏ-வாக தினகரன் வென்றிருப்பதால் எடப்பாடி – பன்னீர் அணியில் அப்படி என்ன புதுசா மாற்றம் வந்துவிடப்போகிறது? ஒரு சாதாரண அவர்தான் சுயேச்சை MLA,  ஆளும் அதிகாரத்தில் இருக்கும் இந்த இரட்டை குழல் என்ன செய்துவிட முடியும்? என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். வளத்த கிடா மார்பில் பாய்வதைப்போல இவர்கள் எங்களது மக்கள் செல்வரை சாதாரணமாக நினைக்கிறார்கள், அண்ணன் தினகரனின் ஆட்டத்தை இனி பாப்பீங்க என கெத்தாக சொல்கிறார்கள் குக்கர் பாய்ஸ்....

மற்றவர்களைப்போல அவரும் ஒரு MLA தான் என சாதாரணமாக எடைபோட வேண்டாம்... ஆட்சியை கலைக்கவும், கட்சியை கைப்பற்றவும் அண்ணன் எந்த நிலைக்கும் செல்ல தயங்க மாட்டார் என்றே சொல்லிவருகிறார். சமாதானத்திற்கு வழியில்லை என்பதால், தினகரன் தனது சித்து வேலைகளை இனி ஆரம்பிக்க உள்ளாராம். அதற்க்கான முதற்கட்ட வேலையை ஆரம்பித்தும்விட்டார். இதையடுத்து, தமிழக அரசியலில் அடுத்த ஆரம்பம் என வீராப்பாக இருக்கிறார்களாம்.

dinakaran open challenge to edappadi palanisamy team

தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA க்கள் 18 பேரின் நீக்கம் செல்லாது என நீதிமன்றம் கூறியதும், மற்றவர்கள் அவர்கள் தானாக முன் வந்து தினகரனை முதல்வராக முன்மொழிவார்கள் என்பதே இவர்களது எண்ணம். இதற்கு எடப்பாடி, பன்னீர், ஜெயக்குமார் என தங்களுக்கு எதிராக உள்ளார்களாம்.

சரி அது போகட்டும்... முதல்வராக எடப்பாடி, துணை முதல்வராக பன்னீரும் தினகரனும் இந்த யோசனை எப்படி என கேட்டார்களாம். தனக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக தினகரன் பேசினால், அவரை முதல்வராக்கிவிட்டு இரண்டு துணை முதல்வர்களாக எடப்பாடியும் பன்னீரும் இருப்பார்களாம். இப்படிச் செய்யும் போது இவர்களுக்குள் இருக்கும் பெரிய பிரச்சனை முழுவதுமாக முடிந்துவிடுமாம். ஆனால், இந்த டீலுக்கு தினகரன் நோசொல்லிவிட்டாராம். எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவருக்கும் எந்தப் பதவியும் தரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம். தினகரன் செல்வாக்குப் பெறுவது தங்களுக்கு தான் முதல் ஆபத்து என்பது பன்னீருக்கு நல்லாவே தெரியும். அதனால் அவரும் கூடசேர்ந்து வாளேந்தியிருக்கிறார். ​

dinakaran open challenge to edappadi palanisamy team

ஆனால் இவர்கள், ஆட்சி கலைந்துபோனாலும் கவலை இல்லை, தினகரன் முதல்வரானால் நமக்கு ஆப்பு நிச்சயம் வைத்துவிடுவார்,  என்கிறது ஆளும் தரப்பு. தினகரன் தலையெடுத்தால் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அரசியல் வாழ்க்கை அச்த்தமனம் என்ற அச்சத்தில் உள்ளார்களாம், ஏனெனில் இவ்விருவரும் தங்கள் குடும்பத்திற்கு செய்த துரோகத்தை  தினகரன் மன்னிக்கப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியுமாம்.

இதனால், தினகரனிடம் சமாதானமாக போய், செல்லா காசாவதை விட மோதிப்பார்ப்போம் என்ற முடிவில் உள்ளாராம் எடப்பாடி. 

dinakaran open challenge to edappadi palanisamy team

ஆனால் தினகரனோ... முதலில் எடப்பாடி தனது அமைச்சரவை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் கொடுக்க வேண்டும்... என்னை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வுசெய்ய வேண்டும்... இதனையடுத்து யார் யார் அமைச்சர்கள் என்பதை நாம் உட்கார்ந்து பேசணும்’ என தினகரன் கறாராக சொன்னாராம். அப்படி ‘என்னிடம் ஒப்படைக்காவிட்டால் எப்படிப் பறிப்பது என்று எனக்குத் தெரியும்’ என்பது தினகரனின் சபதம்.”

Follow Us:
Download App:
  • android
  • ios