dinakaran mla planning to meet edappadi
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திக்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் பழனிசாமியை, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்திக்க உள்ளார்.
முன்னதாக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
அதனடிப்படையில் சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சர் பழனிசாமி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை இன்று சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.jpg)
தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க எம்.எல்.ஏக்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, டிடிவி தினகரன் கட்சி பணிகளில் ஈடுபட இடையூறு செய்யக் கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.
மேலும், கட்சி அலுவலகம் செல்லும்போதும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் முதலமைச்சர் எடப்பாடியிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி, டிடிவி தினகரன் கட்சியையும், எடப்பாடி பழனிசாமி, ஆட்சியையும் கவனித்துக் கொள்ளக்கோரியும் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முன் வைக்க உள்ளனர்.
