ஸ்டாலின், தினகரன், எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மும்முனைப் போட்டி சூடு பிடித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட்டை விட காலியாக இருந்து நடத்தப்பட்ட இடைத் தேர்தல் முடிவு மட்டுமே அதிர்வலையை ஏற்படுத்தும் எனது தெரிகிறது.

இடைத் தேர்தல் ரிசல்ட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் தினகரன் டீமில் ஐக்கியமாக  உள்ளார்களாம். அமமுகவை கட்சியாக பதிவு செய்வதற்கு முன்பு வரை பலத்த சரிவை சந்தித்த தினகரனுக்கு இடைத்தேர்தலுக்குப் பின் தனக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவால் ஏறுமுகம்தான். அதில் தேர்தல் நேரத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட்கள் பலர் அமமுகவிற்க்கே வாக்கு வாங்கிக் கொடுத்ததும் அரங்கேறியதாக சொல்லப்பட்டது.

 

இந்த உள்ளடி வேலை என என விசாரித்தால், தேர்தல் பிரச்சாரங்களின்போதே சீட் கிடைக்காத காரணங்களினால் ஏமாந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் அமமுகவுக்காக சில உள்ளடி வேலைகளில் இறங்கியதாக சொல்லப்பட்டது. 

இதனால் அவசரம் அவசரமாக அமமுகவை கட்சியாக பதிவு செய்த தினகரன், முதல் வேலையாக அதிருப்தி தரப்பினரை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கினாராம். இதில் வந்து சிக்கியது மதுரை முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம். ஜெயலலிதா இருந்த சமயத்தில்  மாவட்ட செயலாளராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். விசுவாசத்தால்   பொறுப்பு, பதவி வந்து சேரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர். இதற்காக ஓபிஎஸ் மகனுக்காக தொகுதியில் வேலைகளை இழுத்து போட்டுகொண்டு செய்தவர்.   ஆனால் திருப்பரங்குன்றத்தில் இவருக்கு சீட் தரப்படவில்லை. இதனால் கோபத்தில் தேர்தல் பணிகளைகூட புறக்கணித்துவிட்டாராம். ஒரு பக்கம் ஓபிஎஸ் தரப்பு இவரை சமாதானப்படுத்த முயன்றாலும், இவரை தன் பக்கம் இழுக்கவே தினகரன் தரப்பு முயல்கிறாராம். 

அடுத்ததாக மறைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் குடும்பத்தினர் சீட்டு கேட்டு தராததால், பயங்கர அப்செட்டில் இருக்கும் குடும்பத்தையும்  வளைக்கும் வேளையில் இறங்கியுள்ளார்களாம்.இதுபோலவே ஒவ்வொரு மாவட்டத்திலும், எம்பி சீட் கேட்டு அப்செட்டில் உள்ளவர்களை டீல் பேசச் சொல்லி ரகசிய உத்தரவு போட்டுள்ளாராம்  தினகரன். ஆபரேஷனில் குதித்த தினகரனின் வலையில் சிக்காமல் இருக்க எடப்பாடிக்கு நெருங்கிய சில அமைச்சர்கள் அதிருப்தியில் உள்ளவர்களை நேரடியாக சந்திக்கும் முயற்சியில் உள்ளார்களாம்.