அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்புப் பயணம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. அங்கு டிடிவி தினகரன் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடலூருக்கு வந்த டிடிவி தினகரனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  

கடலூர் மாவட்ட மக்கள் சந்திப்பிற்கு நேற்று வேப்பூருக்கு வந்த டி.டி.வி.தினகரனுக்கு, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் வேப்பூர் காமராஜ், டி.டி.வி. தினகரனுக்கு வெள்ளி வீரவாளை நினைவு பரிசாக வழங்கினார். இதில் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் துரைசாமி, ஒன்றிய நிர்வாகி முயல் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து டி.டி.வி. தினகரன் வேப்பூரில் இருந்து மு.பரூர், மங்கலம்பேட்டை, விருத்தாசலம் கடைவீதி, கருவேப்பிலங்குறிச்சி ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசிய தினகரனுக்கு வழி நெடுகிலும் மலர் தூவியும்,பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

மேலும், இன்று இரண்டாவது நாளாக கடலூர் கிழக்கு மாவட்டம் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டுள்ள தினகரனுக்கு மேம்பாலம், கூட்ரோட்டில் நாலா பக்கமும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அதற்கு முன்னதாக பட்டாசு, மேளதாளங்கள், நடனம் ஆடும் பெண்கள் என உற்சாக வரவேற்ப்பால் திக்குமுக்காடிப்போயுள்ளார் தினகரன்.